செவ்வாய்க்கிழமை, மார்ச் 19, 2019
   
Text Size

ராடா நிறுவன மோசடி வழக்கு: விசாரணைகளிலிருந்து நீதிபதி விக்கும் கலுஆராச்சி விலகல்

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

101

டிரான் அலஸ் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தான் விலகுவதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுஆராச்சி தெரிவித்துள்ளார்.

 

ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டில் டிரான் அலஸ் உள்ளிட்ட 04 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இதுவரையில் தனது முன்னிலையில் நடைபெற்றதாகவும், எனினும் சாட்சி விசாரணைகளின் போது வௌியாகிய பல விடயங்கள் காரணமாக தனிப்பட்ட ரீதியில் வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாகவும் மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுஆராச்சி இன்று அறிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையை கொழும்பு, இலக்கம் – 05 மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சியின் முன்னிலையில் முன்னெடுக்குமாறும் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 29 ஆம் திகதி வழக்கு விசாரணை நடத்தப்படும் என மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...25365
மொத்த பார்வைகள்...2257806

Currently are 468 guests online


Kinniya.NET