ஜமாலின் கொலையுடன் தொடர்புடையவர்களை சரணடையுமாறு கடிதம்

 

Saudi-1[1]

ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் தொடர்புடைய 18 சந்தேகநபர்களை சரணடையக்கோரும் கோரிக்கைக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

துருக்கிய சட்டவாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கைக் கடிதத்தினூடாக, சவுதி அரேபியாவில் உள்ள சந்தேகநபர்களை துருக்கிக்கு அழைத்துவந்து, சரணடையச்செய்யுமாறு கோரப்படவுள்ளது.

சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோகியை கொலை செய்ய உத்தரவிட்டவர்கள் தொடர்பான விபரங்களை அந்நாடு வௌியிட வேண்டுமென துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன் வலியுறுத்தியிருந்த நிலையில், இந்தக் கோரிக்கைக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவிற்கு வருமாறு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் விடுக்கப்பட்ட அழைப்பை, ஜமால் கஷோகியின் மனைவி ஹற்றிஸ் சென்கிஸ் (Hatice Cengiz) நிராகரித்துள்ளார்.

அத்துடன், தமது கணவரின் மரணம் தொடர்பான விசாரணைகளில் அமெரிக்கா தீவிரம் காட்டவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

துருக்கியில் உள்ள ஜமாலின் மனைவி அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அழைப்பானது அமெரிக்க மக்களின் கருத்துக்களைத் திசைதிருப்பும் நோக்கம் கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சவுதியில் வசித்த ஜமாலின் மகன் சலா கசோகி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதுடன், அவருக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு சவுதி அரசாங்கம் இணக்கம் தெரிவிக்க வேண்டுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

comments