வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 29, 2014
   
Text Size

குறிஞ்சாக்கேணி கல்விக் கோட்ட மட்ட ஆண்களுக்கான மெய்வல்லுனர் போட்டி!

 sp06

(எம்.பரீத்)

கிண்ணியா கல்வி வலயத்தின் குறிஞ்சாக்கேணி கோட்ட மட்ட ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி வியாழக்கிழமை(9) கிண்ணியா தி/ தாருள் உலூம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

கிண்ணியா குறிஞ்சாக் கேணி கோட்டக் கல்வி அதிகாரி ஏ.ஆர்.எம்.இப்றாகீம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி மற்றும் சிறப்பு அதிதியாக கிண்ணியா உடற் கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.நஜிமுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப் போட்டி நிகழ்ச்சியில் குறிஞ்சாக் கேணி கோட்டத்தில் உள்ள 26 பாடசாலைகள் கலந்து கொண்டன.

இந்நிகழ்வில் உயரம் பாய்தல், குண்டு போடுதல், பரிதி வட்டம் வீசுதல் 5000 மீற்றர் , 1500 மீற்றர் ஓட்டம் போன்ற பல்வேறு போட்டிகள் நடை பெற்றன.

இந்நிகழ்வின் இன்று(10) பெண்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

sp01

sp02

sp03

sp05

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...37332
மொத்த பார்வைகள்...674989

Currently are 50 guests online


Kinniya.NET