திருகோணமலையில் எனது நாட்கள்..! (Short Biography of Dr.EG.Gnanakunalan)
ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2013 22:05
1983ம் ஆண்டுமுதல் இன்று வரை திருகோணமலை மாவட்டத்திற்கு தனது சேவையை முற்றுமுழுதாக வழங்கிய டாக்டர். ஈ.ஜி.ஞானகுணாளன் அவர்கள் தமது 30 வருட அரச மருத்துவ சேவையிலிருந்து இவ்வாண்டுடன் (2013) ஓய்வுபெறுகிறார். இத்தருணத்தில் திருமலையில் அவர் வாழ்ந்த காலம் பற்றி அவரால் தெரிவிக்கப்பட்ட ஒரு சிறிய வரலாற்றுத்தொகுப்பு..
நான் 24.11.1951 அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்து, கல்வி பொது தராதர உயர்தரம் வரை யாழ்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்றேன். சென்னை கிறித்தவக் கல்லூரியில் BSc (Zoology) கற்றேன். பின் மதுரை மருத்துவக் கல்லூரியில் 1982 இல் மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்தேன்.
1985 இல் Dr.கௌசலாம்பிகை (தற்போதைய PDHS-கி.மா.)அவர்களை திருமணம் முடித்து 02 மகன்களும் உள்ளனர். மூத்தமகன் போல் ரொசான் தனது மருத்துவப் படிப்பை ரஸ்யாவில் முடித்து சுகாதார அமைச்சின் அனுமதிக்காக காத்திருக்கிறார். இளையவர் அல்வின் அபிநயன் கணணி மென்பொருள் பொறியியலாளர் துறையில் BSc (Hons) முடித்து VIBRESSA இல் பணியாற்றுகிறார்.
எனது மருத்துவ பணியை 10.11.1983 இல் திருகோணமலை தள வைத்தியசாலையில் ஆரம்பித்தேன். தொடர்ந்து 06 வருடங்கள் சேவையாற்றிய பின் திருகோணமலை மாவட்ட மருத்துவ அதிகாரியாக MOH அலுவலகத்திற்கு மாற்றலாகிச் சென்றேன். அங்கு சேவையாற்றும் போது மாவட்டம் முழுவதும் சென்று சுகாதார செயற்பாடுகளில் ஈடுபட்டேன்.
இதன் பின்னர் பிராந்திய தொற்றுநோய் , மலோரியா தடுப்பு மற்றும் தாய் சேய் பராமரிப்பு மருத்துவ அதிகாரியாக ஏப்ரல் 2003 வரை கடமையாற்றினேன்.
பின்னர் பதவியுயர்வு பெற்று திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளராக டிசம்பர் 2008 வரை கடமையாற்றினேன்.
ஜனவரி 2009 முதல் செப்ரம்பர் 2010 வரை பொது சுகாதார மருத்துவ அதிகாரியாக கிழக்கு மாகாண சுகாதாதர சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் கடமைபுரிந்தேன்.
ஒக்டோபர் 2010 முதல் திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையைப் பொறுப்பேற்று இவ் வைத்தியசாலையை நாட்டின் ஒரு சிறந்த தர பராமரிப்பு சேவையுள்ள வைத்தியசாலையாக கொண்டு வந்துள்ளேன்.
சில முக்கிய நிகழ்வுகள்
நான் MOH ஆக கடமையாற்றிய நாட்களில் குறைந்த அலுவலர்களுடன் தனி ஒரு மருத்துவராக நோய்தடுப்பு, கர்பிணி தாய் பாதுகாப்பு, பாடசாலை சுகாதார சேவை போன்றவற்றை 90% இற்கும் கூடுதலாக மாவட்டத்திற்கு வழங்கியுள்ளோம்.
1990 இல் திருகோணமலையில் இருந்து மருத்துவர்கள் வேறு இடங்களுக்கு சென்ற வேளையில் நானும் எனது மனைவியும் தள வைத்தியசாலை கடமைகளை எதுவித
இடையூறுமின்றி செய்துள்ளோம். இவ் வேளைகளில் 06 மாத காலம் இரவு;கடமையை எதுவித விடுமுறையும் எடுக்காது நிறைவேற்றியுள்ளேன்.
1997 இல் இத்தாலிய அரசாங்கம் வைத்தியசாலை முன்னேற்ற வேலைகளை நிறுத்த முற்பட்ட போது நான் ஆயர் மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் ஆகியோரின் உதவியுடன் இத்தாலிய நாட்டு தூதுவரிடன் சென்று கதைத்து, தெரிவு செய்யப்பட்ட 5 வைத்தியசாலைகளில் எமது வைத்தியசாலையையும் இணைத்து ஒரு புதிய கட்டிடத்தை நிறுவ முடிந்தது.
அணுசரனையாளர்களின் உதவியுடன் தள வைத்தியசாலை 2003 இம் ஆண்டு பொது வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டது.
சுனாமித் தாக்கத்தின் பின் யுஅநசiஉயசநள திட்டப்பணிப்பாளர் லிசா அவர்களிடம் கேட்டதற்கிணங்க ரூபா 350 மில்லியன் செலவில் புதிய கட்டிடத் தொகுதி கட்டப்பட்டு 2012 ஆம் ஆண்டு அதி மேதகு சனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது,
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரனையுடன் ஆசிய அபிவிருத்தி வங்கி, நெக்கோட் ஆகியவற்றினால் ரூபா 200 மில்லியன் செலவில் களங்கள் மேம்படுத்தப்பட்டு புதிதாக்கப்பட்டன.
27 கிளைகளுக்கான பெயர்பலகைகளை 'களணி கேபிள்' நிறுவனம் வழங்கியது.
அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் ஆசிய அறக்கட்டளை ஆகியவை இணைந்து எமது வைத்தியசாலையில் சிறந்த தரத்துடன் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
* வைத்தியசாலை வாசல் பெயர்பலகை
* முழு வைத்தியசாலை, அணைத்து கட்டிடங்களினதும் வரைபடங்கள்
* அடையாள பெயர் பலகைகள்
* பணி நோக்கு, பணிக்கூற்று மற்றும் பெறுமானங்கள் என்பனவற்றின் காட்சிப்படுத்தல்
* நோயார்களுக்கான விபரங்கள்
வைத்தியசாலை குழு மற்றும் ஏனைய அணுசரனையாளர்களின் உதவியுடன் சுகாதார அமைச்சு பொது வைத்தியசாலையை தன்கீழ் கொண்டு வர முயற்சி எடுத்துள்ளோம்.
ஏனைய செயற்பாடுகள்
திருமலை ரோட்டரி கழக முன்னாள் தலைவர் /அங்கத்தவர் 1984 முதல்
தலைவர் – செஞ்சிலுவை சங்கம், திருமலை / அங்கத்தவர் 1984 முதல்
இலங்கை மெதடிஸ்த திருச்சபை - முன்னாள் துணை தலைவர்
பரி. யோவான் படையணி – மருத்துவ ஒருங்கினைப்பாளர்
***
"இவர் தனது அரச மருத்துவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றாலும், அவருடைய சமூக சேவைப்பணிகள் எமது திருகோணமலை மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கவேண்டுமென வேண்டிக்கொள்வதுடன், அவர் நிறைந்த தேகாரோக்கியத்துடன் பல்லாண்டுகள் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.." - கிண்ணியா நெட்
சிறப்புக் கட்டுரை

Comments
viagra without a doctor prescription walmart
can get viagra over counter
viagra without a doctor prescription: http://iviagratye.com/#
best place to buy viagra
RSS feed for comments to this post