நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களில் 08 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வழக்குகளை விசாரிப்பதற்கு 15 வருடங்கள் செல்லும் என அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக நீதின்றங்கள் மற்றும் நீதவான்களை இரட்டிப்பாக்குவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை குறைப்பதற்காக 8000 கைதிகளை புனர்வாழ்வுக்குட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

Comment