முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றியமைப்போம்

, 4 திருமணங்கள் செய்து கொள்வதும் ரத்து செய்யப்படும் மஹிந்த ராஜபக்ஸ...!

முஸ்லிம் திருமண சட்டத்தை எமது அரசாங்கம் வந்ததும் மாற்றியமைப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறைந்த வயதுடைய சிறுமியரை திருமணம் செய்யவும், 4 திருமணங்களை செய்து கொள்ளவும் சிலருக்கு சட்டத்தில் காணப்படும் சந்தர்ப்பம் ரத்து செய்யப்படுமென்றும் அனைத்து தரப்புக்கும் நாட்டில் ஒரே விதமான சட்டங்கள் அமுல்படுத்தப்படும்.

நான் ஓர் முஸ்லிம் பெண்ணை சந்தித்தேன் அந்தப் பெண் தரம் 7ம் ஆண்டில் கல்வி கற்ற போது அதாவது 13 வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். 21 வயதில் குறித்த பெண் விவகாரத்து செய்யப்பட்டுள்ளார் எனவும் பாலியல் விவகாரங்கள் எதுவும் தெரியாத காரணத்தினால் இந்த பெண் விவகாரத்து செய்யப்பட்டுள்ளார். 13 வயதான சிறுமியொருவரிடம் எதனை எதிர்பார்க்கின்றார்கள்? சுதந்திர தின நிகழ்வின் போது ஓர் ஆளுனர் ( ஆசாத் சாலி) தனது இரண்டு மனைவியரை அரசாங்க நிகழ்விற்கு அழைத்து வந்திருந்தார். எத்தனை மனைவியர் இருந்தாலும் அரசாங்க நிகழ்வு ஒன்றில் அவ்வாறு மனைவியரை அழைத்துவர இடமளிக்கப்பட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Comment