சுமார் மூன்று வருட கால துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன், திருகோணமலைத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுமென, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில், பிரதேச முக்கியஸ்தர்களுடன் பிரதேச அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடலில், இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், திருகோணமலைத் துறைமுகம் ஏற்றுமதி - இறக்குமதித் துறைமுகமாக மாற்றப்பட்டு, இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுமென்றார்.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கும் வருமானத்துக்கும் இத்துறைமுகம் பாரிய பங்கு வகிப்பதாகத் கூறிய அவர், இந்த வருட நிதி உதவிகள் திட்டத்தின் ஊடாக, திருகோணமலை மாவட்டம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comment