2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கமைய, 3,01,777 பரீட்சார்த்திகள் 2020 உயர்தரப் பரீட்சையில் தோற்றினர்.

இதில் 1,94,297 பேர் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்க தகுதி பெற்றுள்ளனர்.

86 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Comment