திருகோணமலை பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலக அதிகாரி ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்ட செயலாளர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை பிரதேச செயலாளருக்கும், மாவட்ட செயலகத்தின் நிர்வாக அதிகாரி ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, திருகோணமலை மாவட்ட செயலாளரும் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment