திருகோணமலை மாவட்டத்தில் தற்போது நிலவும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் சூழ்நிலை காரணமாக, கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிவாயல்களின் செயல்பாடுகளையும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று லுகர் தொழுகையுடன் அனைத்து பள்ளிவாயல்களின் கதவுகளும் மறு அறிவித்தல்வரை மூடப்பட உள்ளன. எனினும் அதான் சொல்லுவதற்கான அனுமதி மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது என கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். கனி குறிப்பிட்டார்.

ஏற்கனவே கிண்ணியாவில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர்ந்த எனைய அனைத்து வியாபார நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இன்னும் அமுலில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Comment