திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதியின் 99 ஆம் கட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் பலியானார். 

இன்று (22)  குறித்த வீதியில் பயணித்த வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தின்போது உயிரிழந்த நபர் குறித்த வேனில் பயணித்த திருகோணமலை கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞராவார். 

இவ்விபத்தியில் சிக்கிய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

AD

 

Comment