எம்.எஸ்.எம். நியாஸ்
கிண்ணியா பிரதேச மக்களுடைய பங்களிப்புடன் KJU-KDF அமைப்பினரால் கோமரங்கடவல கொரோனா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருக்கும் மக்களுக்கான சுகாதார நிவாரணப் பொதிகள் இன்று (6) வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்வி கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் ,சட்டத்தரணி ஸாகிர் மற்றும் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி நிலைத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி புத்தி ரணசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய கோமரங்கடவல பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இந்த உதவிகள் மிகவும் பெறுமதி மிக்கவை என்றும் நாம் இலங்கையர் என்கின்ற வகையில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இடர் மிகுந்த காலத்தில் கைகோர்த்து எம்மையும் எமது நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வைத்தியர் புத்திக ஜெயசிங்க அவர்கள் கிண்ணியா மக்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

Comment