அரச ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை எடுக்க முடிவு செய்யப்படவில்லை என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எனினும், பல்வேறு நெருக்கடிகளின் போது மக்கள் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சூழ்நிலையில், அனைவரும் நன்கொடைகளை வழங்கினால், தினசரி வாழ்வாதாரம் செய்பவர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களிடமிருந்தும் அரசாங்கம் நன்கொடைகளை எதிர்பார்க்கிறது என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Comment