கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பகுதியில் ஊரடங்கின்போது அத்தியாவசியமான காரணமின்றி வெளியில் நடமாடிய நபர்களுக்கு அன்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று கிண்ணியா புஹாரி சந்தியில் வைத்து நடமாடிய 39 நபர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டதாக கிண்ணியா பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவிக்கின்றது.

இதில் 21 பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் 18 அன்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.

இதேவேளை மக்கள் வெளியில் அத்தியவசிய தேவை தவிர வர வேண்டாம் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி
டொக்டர் எம்.எச்.எம். றிஸ்வி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

(KN)

Comment