திருகோணமலையின் உள்ள சட்டத்தரணிகளின் மத்தியில்  ஆளுமை நிறைந்த சட்டத்தரணிகளில் ஒருவராக திகழ்ந்த திரு.கலியுகவரதன் பாலமுருகா அவர்கள் இன்று காலை மட்டக்களப்பு வைத்தியயசாலையில் கொரோனா என்ற வைரஸ்னால் பீடிக்கப்பட்டு அமரத்துவம் அடைந்தார்.

அவரது இறுதிக்கிரிகைகள் பொலநறுவையில் நடைபெறும்.

அன்னாரது துணைவியர் திருமதி.சந்திரவதனி ஒரு வைத்தியராவார்.

அவர் சென்ற வருடம் கிழக்கு மாகாண சுகாதார பணிமனையில் கொரோனா தொடர்பான தகவல் வழங்கும் பிரிவில் கடமையாற்றினார்.

இந்த வருடம் இடமாற்றலாகி தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(அப்துல்சலாம் யாசீம்)

Comment