தென்னிந்திய முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் அஷ் ஷெயிக் கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் இன்று (22) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். அவர் காலஞ்சென்ற இந்திய முஸ்லிம் ஆன்மீகத் தலைவரான அஷ் ஷெயிக் கலாநிதி தைக்கா சுஹாய்ப் அலீமின் புதல்வராவார்.

மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்து இச்சந்திப்பின் போது கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம், இந்நாட்டின் மஹாசங்கத்தினர் மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

குறித்த சந்திப்பின் போது கலாநிதி அக்ரஹெர கஸ்ஸப தேரரும் கலந்து கொண்டிருந்தார்.

கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீமுடன் வருகைத்தந்திருந்த முஸ்லிம் மதத் தலைவர்களும் பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Comment