Sunday, 16, Jun, 9:32 PM

 

 

எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா

இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமாக விளங்குகின்ற மனிதன் விலங்குகள், மற்றும் ஏனெயவற்றிலிருந்து தன்னைச் சிறந்தவனாகவும்,உயர்ந்தவனாகவும் வேறுபடுத்திக்காட்டுவதற்கு அவனது ஆறறிவு மூலமான பேசுதல்,சிரித்தல்,கிரகித்தல்,புரிந்துணர்வு,பண்பாடு மற்றும் கலாசார விழுமியங்களுடனான நடத்தை போன்ற ஆற்றலைக் கூறலாம்.

அந்த வகையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் தொடர்புகளையோ,அல்லது தனது உணர்வுகளையோ வெளிப்படுத்துவதாயின் மொழி மிக முக்கியமானதாகும். இங்கு மனிதனுக்கு அவனது செய்திகளையும்,தகவல்களையும் பரிமாரிக்கொள்வதற்கு  மொழி ஒரு ஊடகமாக பயன்படுகின்றது. மொழியானது நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம்,என வேறுபட்டவையாக இருந்தாலும் கூட அதனைப் புரிந்து கொள்கின்ற கடப்பாடு மிக முக்கியமான தொன்றாகும்.மேற்கத்தைய நாடுகளைப் பொறுத்தவரை கூடுதலான நாடுகளில் அந்நாட்டுக்கென ஒரு பொதுவான மொழியே பெறும்பாலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.ஆனால் எமது நாடான இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழுகின்ற நாட்டில் அச்சமூகத்தில் இனரீதியிலான வேறுபாட்டினால் அவர்கள் பேசுகின்ற மொழிகளும் வேறுபட்டவையாகவே காணப்படுகின்றது. குறிப்பாக இங்கு  இரண்டு மொழிகள் பிரதானமாக பயன்படுத்தப்படுவதால் அவ்விரண்டு மொழியினையும் தெரிந்திருக்க வேண்டியதும் அதற்கு முகங்கொடுக்க வேண்டியதுமான கடப்பாடும்,சூழ்நிலைகளுக்கும்  உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம் என்பதனை நாம் வேறொரு மொழி பேசுகின்ற இனத்தவருடன் தொடர்புகளை மேற்கொள்கின்ற போது அதன் முக்கியத்துவம் உணரப்படுகின்றது.அந்தவகையில் நம் நாட்டில் சிங்களமும்,தமிழ் மொழியும் பிரதான மொழியாக காணப்படுகின்ற அதே வேளை அவை இன்றைய சூழ்நிலையில் அத்தியவசியமானதாகவும் கருதப்படுகின்றது.


எமது நாட்டில் சகோதர மொழியினை தெரிந்து கொள்ளாமையால்,ஏனெய சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துதிலும், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்குமிடையில் ஏற்பட்ட வெகுதூர இடை வெளியே இன முரண்பாடுகளும்,பிரிவினைகளும் ஏற்பட காரணமாகின.அதுவே  மொழிமீதும் வெறுப்பை ஏற்படுத்தி அதன் முக்கியத்துவம் பற்றி உணரப்படாமலும் இருந்தன. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இம் மொழியின் முக்கியத்தும் சாதாரண நபர் முதல்,அரச தொழில் புரிவோர் வரை அவசியமான தொன்றாக கட்டாயமாகி விட்டது.இவை ஒவ்வொரு தொழில் வல்லுனர்களிலும், அவர்களின் தொழிலின் தன்மையைப் பொறுத்து அதன் தேவைப்பாடும் அவசியமும் கருதப்படுகின்றது.குறிப்பாக இன்று உலகமே பல்வேறு செய்திகளை நிமிடத்திற்கு நிமிடம் ஊடகத்தில் வெவ்வேறு மொழிகளில் வெளியிட்டு அதனால் மக்களுக்கு தெரியப்படுத்தி  நன்மை பயபித்துக்கொண்டு இருக்கின்றது.இவை எமது நாட்டைப்பொறுத்த வரை வெவ்வேறு பிரதேசங்களிலும் நடைபெறும் செய்திகளை ஊடகம் மூலம் அறிவது சற்று தாமதமாகவே எம்மால் அறிய முடிகின்றது ஏனெனில்  அந்நிகழ்வு ஒரு சிங்கள பிரதேசத்தில் ஏற்படுவதாக இருக்குமானால் அச்செய்தியினை சேகரிக்கின்ற  ஊடகவியலாளர் தாய் மொழியை தமிழ்  மொழியாக கொண்டவராக இருந்தால் அவர் சரலமாக சிங்களம் பேச தெரிந்தவராகவும், அம்மக்களுடன் தயக்கமின்றி உரையாடக்கூடியவராகவும், இருந்தால் மட்டுமே தமிழ் பேசக்கூடிய இனத்தவர்கள் விரைவாக அச்செய்தியினை அறிய கூடியதாக இருக்கும் மாறாக அவரினால் சிங்கள மொழியில் உரையாடக்கூடிய ஆற்றல் இல்லை என்றால் அச்செய்தியினை தமிழ் பேசுகின்றவர்களுக்கு காலதாமதமாகவே அறிய முடியும் சில வேலைகளில் அச்செய்தி எமது காதுகளுக்கு எட்ட முடியமலும் ஏற்படலாம்.அதேபோல் சிங்கள மொழியை தாய் மொழியாக்க் கொண்ட சிங்கள ஊடகவியலாளரும் இவ்வாரான தன்மையுடையவராக இருந்தால் இதே நிலையே ஏற்படும்.இதனை உணர்ந்த திருகோணமலை மாவட்டத்தில் இயங்கிவரும் ஒரு தன்னார்வ தொண்டானது ஒரு சிறந்த முன்னெடுப்பு ஒன்றை முன்னெடுக்க ஆரம்பமானது.


" எழுத்தாணிக் கலைப் பேரவையின் திருகோணமலை ஊடகவியலாளர்களுக்கான அரசக கரும மொழிக்கற்கை மூலமாக சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்"எனும் கருப்பொருளை மையமாக்கொண்டு தமிழ் பேசுகின்ற ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியும்,சிங்கள மொழி பேசுகின்ற ஊடகவியலாளர்களுக்கு தமிழ் மொழியும் கற்பிக்கின்ற மொழிக்கற்கை நெறியானது "தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்"(NILET) உடன் இணைந்து தமது நெறியாழ்கையினை சிறப்பாக ஆரம்பித்தது. இவை ஏன் ஊடாக வியலாளர்களுக்கு அவசியம் என்பதை 'பாம்பின் கால் பாம்பறியும்' என்பது போல எழுத்தாணியானது ஒரு ஊடக செயற்பாட்டு நிறுவனமாக செயற்படுவதனால் ஊடக வியலாளர்கள் இரு மொழி ஆற்றலின்மையால் அவர்கள் முகங்கொடுக்கும்  இன்னல்களை நிவர்த்தி செய்யும் முகமாகவும் இவ்விரு மொழி பேசுகின்ற சமூக்கங்களுக்கிடையிலும் " சமூக நல்லிணக்கத்தை"ஏற்படுத்துவதே இவ்வெழுத்தாணியின் கருப்பொருளாகவும் நோக்கமாகவும் இருந்ததை இம்மொழிக்கற்கையின் போது ஏற்படுத்தப்பட்ட "சமூக ஒன்று கூடல்"(Social Gathering) நிகழ்வானதும், மலையக மற்றும் கண்டி ஊடக வியலாளர்களுடன் கண்டி நகரில் நடைபெற்ற " ஊடக வெளிபாடுடனான சந்திப்பு நிகழ்வு" (Expose Programe) ஆகிய இரண்டும் பறைசாட்டுகின்றனவாக அமைந்ததில் இப்மொழிப்பயிற்சி நெறியை கற்றுக்கொள்பவனும் அவ்விரு நிகழ்விலும் கலந்து கொண்டவனில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதமடைகின்றேன்.

இம்மொழிப்பயிற்சியானது தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்களை ஒன்றாக இணைத்தும் வெவ்வேறாகவும் மொழி கற்கை நெறி பல நுட்பங்களைக் கொண்ட முறைகளில் பயிற்றப்பட்ட சிறந்த தேர்ச்சி மிக்க வளவாளரகளைக்கொண்டு  கற்பிக்கப்படுகின்றமை விசேட அம்மசமாகும். இம்மொழிப்பயிற்சி க்கு முன்னர் சிங்களத்தில்  பேசத்தைரியாதவர்களாகவும்,எதுவுமே எழுதத்தெரியாதவர்களாகவும்,எழுத்தை இணங்கண்டு கொள்வதில் இடர்களை மேற்கொண்வர்களாகவும், வாசிக்க தெரியாவர்களாகவுமே,நாங்கள் இக்கற்கை நெறிக்குள் காலடி எடுத்து வைத்தோம் ஆனால் இப்போது ஓரளவு பேசக்கூடியவர்களாகவும்,சிங்களமொழி பேசுகின்ற ஒருவரோடு அதனைப் புரிந்தொகொண்டு அதற்கு ஓரளவேனும் பதிலளிக்கக் கூடியவர்களாகவும் எழுதக்கூடிய தன்மைகளைக்கொண்டவர்களாகவும்  எங்களை  வழிப்படுத்திய பெருமை இவ் வெழுத்தாணிக்கே சாரும்.இருந்த போதிலும் இவ் விரு மொழிகளைக்கொண்ட சமூகத்தவர்களோடு கற்கை செயற்பாடுகளுடன் நாங்கள் பிற சமூகத்துடனான புரிந்துணர்வுகளையும்,தத்தமது கலாசார நிகழ்வுகளையும்,தன்மைகளையும் அவரவர்களுடன் இணைந்து செயற்பட்டாலே  இம்மொழியினையும் அச்சமூகத்தின் உணர்வுகளையும் உணரமுடியும் என்பதை அறிந்த இவ்வெழுத்தாணிக்கு தலைமை வகிக்கின்ற தலைமை செயற்பாட்டாளர் அவர்கள் சமூக "ஒன்று கூடல்"என்ற ஒரு தொணிப் பொருளினூடாக தமிழ்  ஊடகவியலாளர்கள் சிங்கள ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கும்,சிங்கள ஊடகவியலாளர்கள் தமிழ் ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கும் " ஒரு நாள் கள விஜம்" ஒன்றை மேற்கொள்வதோடு அவை 6 மணித்தியாலத்திற்கும் குறையாத நேரத்தை அவர்களின் வீடுகளில் அவர்களில் குடும்ப உறுப்பினர்களோடு கழிக்க வேண்டும் என்பதே அந்நிகழ்வின் அம்சமாகும்.இவை இவ்விரு சமூகத்தவர்களின் புரிந்துணர்விற்கும் நற்பு ரீதியான ஒன்றுமைக்கும் பாரிய பங்காற்றுவதோடு அவை நல்லிணக்கத்திற்காதிற்கான அடித்தளமாகவும் அமையும் என்பதோடு அதற்கான முழு உரித்துரிமையும் எழுத்தாணிக்கே சாரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்பதில் அதனை அனுபவித்த நான் சான்றுபகின்றேன்.  இதுவரை சிங்கள நண்பர்களோடு சிரித்துப்பேசி சிறியதளவே பழகிய எமக்கு 6 மணித்தியாலயங்களை அவர்கள் வீட்டிலே அவர்கள்களின் குடும்பதுடனே கழிப்பதென்பதே எமக்கான அன்றைய நிகழ்ச்சி நிரலாகும்.  அவை எனக்கும் ஓர் சவாலான ஒன்றாகவும் படபடப்புடன் கலந்த இலேசான தயக்கமாக  அப்போது அவை இருந்தாலும் கூட அவர்களின் வீட்டுக்குச்சென்ற போது அவர்கள் என்னை அன்போடு வரவழைத்த விதம் அத்தயக்கத்தை இல்லாமல் செய்ததோடு அவர்களின் உபசரிப்பினூடாக குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களின் சுகம் விசாரித்து, சிற்றுண்டி உண்டு மகிழ்ந்து,வீட்டு நிலைமைகள்,அவர்களின் அன்றாட செயற்பாடுகளான சமையல் முறைகள்,கலாசார முறைமை,தெய்வ வழிபாடு,உணவு பரிமாறும் முறை,உண்ணும் முறை,அண்டை வீட்டாருடன் பழகும் முறை,அந்தியில் அவர்களின் வீட்டை விட்டு விடை பெற்று வருகின்ற போது வழியனுப்பிய விதம் என இன்னோரன்ன பல்வேறு செயற்பாடுகளையும்,நடைமுறைகளையும் அறியக்கூடிய இனிதான ஒரு புதிதான அனுபவும் அறிவும் கிடைத்தது.அன்றை இரவில் தூக்கத்திற்க்கு சற்று இடை வெளி கொடுத்தவனாக தலையணையில் தலை சாய்த்தவனாக அன்றைய தினம் நிகழ்ந்த நிகழ்வானது  " சமூக நல்லிணக்கம்" என்பதை இவ்வாரான நிகழ்வென்றின்  மூலமாகவே "சகவாழ்வும் சாமாதானமும்" ஏற்படுத்த முடியும் என்பதை பச்ச மரத்தில் ஆணி அடித்தாற் போல் என் மனதில் ஆழமாக பதிந்த இந்த "சமூக நல்லிக்க" நிகழ்ச்சிச் செயற்பாட்டை ஏற்படுத்திய எழுத்தணியின் ஆழமான மனித நேய செயற்பாட்டை தத்துவரூபமாக படம் பிடித்துக்காட்டியது என் உள்ளத்தில் குடி கொள்ளும் ஓர் அழகிய இளம் பெண்ணாய் என் நெஞ்சை விட்டும் நீங்காத நிகழ்வாய் இடம் பிடித்தோடு,கண்டி மற்றும் மலையக சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அந்நிகழ்வின் ஒரு ஊடகவியலாளர் தாம் ஏனெய மொழி தெரிந்திருக்கா விட்டால் எவ்வாரான இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றனர் என்பதையும் மொழியின் முக்கியத்துவம் பற்றியும்,அதனை தாங்கள் கற்றுக் கொண்ட முறைகள் பற்றியும் தனது அனுபவப்பகிர்வினையும்,மக்கள் ஒரு செய்தியினை விரும்புபவதற்கு எவ்வாரான உத்திகளுடன் செய்திகளை அவர்களுக்கு சென்றடையச்செய்ய வேண்டும் என்பது பற்றிய பொறிமுறைகளுடனான கருத்துக்களும் பரிமாறப்பட்ட நிகழ்வுகளும் எமது எதிர்கால ஊடகப்பயணத்தை நெறி தவராது சிறம்பட செயற்படுவதற்கும்,மொழியினை கற்றுக்கொள்வதற்கும் வழி சமைத்தன.

ஆகவே" நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்" பற்றிய உன்னதமான யதார்த்த நிலையைப் புரிய வைத்த "எழுத்தணியோடு தொடர்ந்து பணிக்க ஆவலோடு அடி எடுத்து வைக்க என்றென்றும் தயாரக உள்ளேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்

Comment


மேலும் செய்திகள்

 • சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

  சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

  Super User 03 September 2023

  சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...

 • எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

  எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

  Super User 03 September 2023

    எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...

 • ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

  ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

  Super User 28 March 2023

  நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...

 • துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

  துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

  Super User 08 February 2023

  துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...

 • வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

  வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

  Super User 08 February 2023

  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...

 • 75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

  75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

  Super User 08 February 2023

  75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...

 • இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

  இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

  Super User 08 February 2023

  2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...

 • GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

  GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

  Super User 08 February 2023

  இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...

 • துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

  துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

  Super User 06 February 2023