நேற்று (22) முதல் இன்று (23) காலை வரையான காலப் பகுதியில் நாட்டில் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 101 பேரும் மூதூர் பொலிஸ் நிலையத்தில் 12 பேர் அடங்கலாக திருகோணமலை மாவட்டத்தில் 42 பேரும் கம்பஹாவில் மூவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 பேரும் யாழ்ப்பாணத்தில் ஒருவரும் நுவரெலியா மாவட்டத்தில் 15 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருவரும் கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

இவர்களில் வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 35 பேரும் களுத்துறை மாவட்டத்தின் அடலுகம கிராமத்தை சேர்ந்த 162 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Comment