MBM பௌண்டேசனின் நிதி உதவியுடன் ( கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை முன்னாள் விரிவுரையாளரும் பல மனித உரிமை அமைப்புக்களின் நிபுணத்துவ ஆலோசகரும் சட்டக் கலாநிதியுமான பௌமி முஹைதீன் அவர்களின் சொந்த நிதியில்) கிண்ணியா தீர்ப்பாயத்தின் ஏற்பாட்டில் கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமாஜதீவு, பூவரசந்தீவு, புதுக்குடியிருப்பு, மணியரசன் குளம், நடுத்தீவு ஆகிய பிரதேசங்களில் கிண்ணியா தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களால் வாழ்வாதாரம் இழந்த மிக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்த கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.எம். அனஸ் அவர்கள் பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
அதேவேளை கிண்ணியா தீர்ப்பாயத்தின் தலைவர் எம்.எப். பர்சித் ஆசிரியர் செயலாளர் ஐ.ஏ.எம். முயீஸ் ஆசிரியர் ஆகியோரோடு ஊடகவியலாளர் இர்ஸாத் இமாமுதீன் மற்றும் கிண்ணியா தீர்ப்பாய உறுப்பினர்களும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
கிண்ணியா தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கிண்ணியா தீர்ப்பாயம் ஒவ்வொரு கிராம மன்றங்களை உருவாக்கி கிண்ணியாவின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காகவும் பங்களிப்பு வழங்கி வரும் ஒரு அரச சார்பற்ற சமூக நிறுவனமாகும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
Comment