கொரொனா தொற்றினால் மரணமடையும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான மையவாடிக்கு ஒதுக்கப்பட்ட கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட வட்டமடு கிராமத்தில் அமைந்துள்ள காணியின் சீர் திருத்த வேலைகள்ஆரம்பம்.

நீண்ட நாள் எதிர்பார்ப்புடன் இருந்த கொரொனா தொற்றினால் மரணமடையும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான மையவாடிக்கு ஒதுக்கப்பட்ட கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட வட்டமடு கிராமத்தில் அமைந்துள்ள காணியின் சீர் திருத்த வேலைகள் கடந்த (26-08-2021)ஆம் திகதி கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிகார்,  பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ஆகியோரது தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது மேஜர் திஸ்ஸனாயக்க, சபையின் செயலாளர் அஸ்வத்கான், இடர் முகாமைத்துவ உத்தியோகத்தர், சபையின் உதவி தவிசாளர் கெளரவ பாசித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர் 

 

Comment