Breaking News:

இலங்கையிலிருந்துபயங்கரவாதத்தைவேரறுப்பதற்குஅனைத்துஉதவிகளையும்வழங்கதயார் - சீனஜனாதிபதிதெரிவிப்பு..

 

  • இலங்கையின் பாதுகாப்புத் துறை நடவடிக்கைகளுக்கு சீனாவிலிருந்து 260 கோடி ரூபாநன்கொடை
  • ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய 150 கோடி ரூபா பெறுமதியான 100 ஜீப் வண்டிகள்உள்ளிட்ட வசதிகள் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு..
  • இருநாட்டு பாதுகாப்பு பிரிவுகளின் ஒத்துழைப்புக்காக புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்..
  • பயங்கரவாத மற்றும் இணையத்தள குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையானநவீன தொழிநுட்ப கருவிகளையும் அறிவையும் இலங்கைக்கு வழங்க சீனா இணக்கம்

 இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்துதேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காகஅனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஜனாதிபதிகௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபாலசிறிசேன அவர்களுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று(14) பிற்பகல் சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பு துறையினரின்செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி அவர்களின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபா நிதிஅன்பளிப்பினை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்தோடு இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 100 ஜீப்வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கு சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

 இருநாட்டு அரச தலைவர்களின் சந்திப்பினைத் தொடர்ந்து இருநாட்டு பாதுகாப்புதுறையினரின் ஒத்துழைப்பிற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றும்கைச்சாத்திடப்பட்டது.

 இரு தரப்பு கலந்துரையாடலுக்காக சீன ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதிகௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு சீன ஜனாதிபதி உற்சாக வரவேற்பளித்தார்.

உலகில் எந்த இடத்தில் கொடிய பயங்கரவாத சம்பவங்கள் தலைதூக்கினாலும் தான் அதனைவன்மையாக கண்டிப்பதாக சீன ஜனாதிபதி வலியுறுத்தினார்கடந்த ஏப்ரல் 21ஆம் திகதிஇலங்கையில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அதிருப்தி தெரிவித்தசீன ஜனாதிபதிதாக்குதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தனது ஆழ்ந்தஅனுதாபத்தை தெரிவித்தார்.

 பயங்கரவாத சவாலை வெற்றிகொண்டு மீளெழும் இலங்கை மக்களுடன் சீன அரசு அனைத்துசந்தர்ப்பங்களிலும் கைகோர்த்து நிற்கும் என்று தெளிவுபடுத்திய சீன ஜனாதிபதிஅதற்காகஅனைத்து சந்தர்ப்பத்திலும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும்தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் மற்றும் அதன்பின் மேற்கொள்ளப்பட்டபாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இருநாட்டு ஜனாதிபதிகளும் பல்வேறு விடயங்களைகலந்துரையாடினர்.

இருநாட்டு பாதுகாப்பு துறையினருக்கு இடையிலான புரிந்துணர்வு வேலைத்திட்டங்களைவலுவூட்டுவதற்கும் புலனாய்வு பிரிவுகளுக்கிடையே தகவல்கள் பரிமாற்றிக்கொள்ளும்வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்பயங்கரவாதத்தைஒழிப்பதைப்போன்றே இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக போலிப்பிரசாரங்களை பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும்குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அந்த அக்குற்றங்களை தடுப்பதற்கு தேவையானதொழிநுட்ப உபகரணங்களும் அறிவும் இலங்கையிடம் இல்லை என தெரிவித்தார்.

அந்த உபகரணங்களையும் தொழிநுட்பத்தையும் இலங்கைக்கு வழங்குவதற்கு துரிதமாகஒத்துழைப்பு வழங்குவதாக சீன ஜனாதிபதி அவர்கள் தெரிவித்ததுடன்அது தொடர்பில்கண்டறிவதற்கு சீன தொழிநுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைஎடுப்பதாகவும் தெரிவித்தார்.

சீனக் கடன் உதவிகளினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திசெயற்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும்கலந்துரையாடியதுடன்அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வதுதனது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

சீன அன்பளிப்பில் கீழ் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படும் சிறுநீரகமருத்துவமனையின் நிர்மாணப்பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுஅனைத்துசந்தர்ப்பத்திலும் சிறந்த நண்பன் என்ற வகையில் இலங்கை சீனாவுக்கு வழங்கும்ஒத்துழைப்பையும் சீன ஜனாதிபதி பாராட்டினார்.அதுபோன்று போதைப்பொருள்ஒழிப்பிற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்னெடுத்துவரும்வேலைத்திட்டங்கள் தொடர்பில் நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி அவர்கள்அந்த சவாலைவெற்றிகொள்வதற்கான ஆற்றல் இலங்கையிடம் காணப்படுவதாகவும் நம்பிக்கைதெரிவித்தார்.

 ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

Videos

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top