Breaking News:

ரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை, ஓமன் வளைகுடா உள்ளிட்ட ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்க விமான போக்குவரத்து நிறுவனங்கள் விமானங்களை இயக்கத் தடை விதித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.



அமெரிக்காவின் கண்காணிப்பு ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்திய பிறகு அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு பயணிக்கும் விமானச் சேவைகளை யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்துவிட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவு வெளியாகியுள்ளது.

பதற்றமும், ராணுவ செயல்பாடுகளும் அதிகரிப்பது மற்றும் சர்வதேச வான்வெளி எல்லைகளில் எந்த எச்சரிக்கையுமின்றி ஈரான் ஏவுகணைகளை பயன்படுத்துவது வருத்தமளிப்பதாக அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க அரசின் தடை உத்தரவு மற்ற நாடுகளின் விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு பொருந்தாது. எனினும், சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஓப்ஸ்க்ரூப் நிறுவனம் அமெரிக்காவின் பரிந்துரை பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஈரான் எல்லையில் விமானங்களை இயக்கவில்லை என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பானிய நிறுவனங்களான ஜப்பான் ஏர்லைன்ஸ், ஏஎன்ஏ ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஈரான் வான்வெளியில் விமானங்களை இயக்கவில்லை என்று தெரிவித்துள்ளன.

Videos

  • Prev
  • Sponsored Section
Template Settings
Select color sample for all parameters
Red Green Olive Sienna Teal Dark_blue
Background Color
Text Color
Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction
Scroll to top