புதுச்சேரி தேங்காய்த்திட்டு சாய் ஜீவா சரோஜினி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் 11-ம் தேதி இரவு தன் வீட்டின் படுக்கை அறையில் இருந்த ஏசியை போட்டுள்ளார். அதில் வழக்கத்துக்கு மாறாக சத்தம் வந்துள்ளது. பழுதாகி விட்டதாக கருதிய ஏழுமலை ஏசியை நிறுத்தி விட்டார்.
நேற்று முன்தினம் ஏசியை பழுது நீக்க மெக்கானிக் கழற்றியபோது அதனுள் பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டார்.
தகவலின் பேரில் அங்கு வனத்துறை ஊழியர்கள் இருவர் ஒரு மணி நேரம் போராடி, ஏசி இயந்திரத்துக்குள் மறைந்திருந்த 2.5 அடி நீள சாரைப் பாம்பை பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர். ஏசி இயந்திரத்துக்குள் இருந்த 3 பாம்பு தோல்களையும் எடுத்தனர். ஏசியின் வெளிப்புற அவுட்டோர் யூனிட்டில் இருந்து வரும் பைப் லைன் துளையை சரியாக அடைக்காததால் அதன் வழியாக பாம்பு ஏசி இயந்திரத்துக்குள் புகுந்துள்ளது. இந்த சாரை பாம்பு ஒரு மாதத்தில் தோலை உரித்து விடும். 3 தோல்கள் இருந்ததால், சுமார் 3 மாதம் ஏசியினுள் இருந்திருக்கக் கூடும் என்று வன ஊழியர்கள் கூறினர்.
-
Hits: 220