நாளை காலை 8.00 மணி தொடக்கம் நன்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும். 5 ஆம் திகதியான இன்று கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
ஜனாதிபதி தேர்லுக்காக கட்டுப்பணம் பொறுப்பேற்கும் பணி கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமானது. நேற்று வரையில் 33 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழு கட்டுப்பணம் செலுத்தியவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.