Wednesday, 22, Sep, 9:50 AM

 

இலங்கையில் கொரொனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதுவரை நாட்டில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 2 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இதுவரை 42 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான 134 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Comment


 

 

Our Branding Partners