மாவனல்லை இளைஞர்களை உள்ளடக்கிய ரீ-ட்ரீ ஸ்ரீலங்கா (Re-Tree Sri Lanka) அமைப்பினால் நேற்று (30) ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (Single Use Plastic - SUP) இற்கு எதிராக ஒரு மாபெரும் விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்வானது மாவனல்லை பிரதான பஸ் தரப்பிடத்தில் மாவனல்லை நகர சபை, மாவனல்லை பிரதேச செயலகம் மற்றும் மாவனல்லை பொலிஸ் நிலையத்தின் ஆதரவுடன் நடைபெற்றது.
ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் இனால் ஏற்படும் தீங்குகள் பற்றியதொரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அவற்றிற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த (eco-friendly) மாற்றீடுகளை அறிமுகப்படுத்தி அம்மாற்றீடுகளைப் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இச்செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ரீ-ட்ரீ ஸ்ரீலங்கா குழுவின் இப் பாரிய முயற்சியை மாவனல்லை நகர சபை செயலாளர் திருமதி தீபா தயங்கனி மற்றும் மாவனல்லை பிரதேச செயலக செயலாளர் திருமதி பிரியங்கனி பெதன்கொட ஆகியோர் அங்குரார்ப்பண நிகழ்வின் போது பெரிதும் பாராட்டினர்.
இவ் விழிப்பூட்டல் நிகழ்வானது சிறார்களின் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் இற்கு எதிரான உரை, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் இனால் ஏற்படும் தீய விளைவுகள் சம்பந்தமான ஆக்கபூர்வமான காட்சிகள், மாற்றீடுகளை அறிமுகப்படுத்தும் விதத்திலான ஒரு விற்பனையகம் மற்றும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் சம்பந்தமான ரீ-ட்ரீ ஸ்ரீலங்கா குழு அங்கத்தவர்களின் பூரண விளக்கம் போன்ற பல சுவாரஸ்யமான அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.
அதே சமயத்தில், இக் குழுவினால் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் சம்பந்தமான ஒரு சுவர் ஓவியமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க பங்களித்த மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய நன்கொடையாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாவனல்லைப் பிரதேச பொது மக்கள் என அனைவருக்கும் ரீ-ட்ரீ ஸ்ரீலங்கா அமைப்பு தனது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஹஸ்பர் ஏ ஹலீம்

Comment