Wednesday, 15, Oct, 4:27 PM

 



மாவனல்லை இளைஞர்களை உள்ளடக்கிய ரீ-ட்ரீ ஸ்ரீலங்கா (Re-Tree Sri Lanka) அமைப்பினால்  நேற்று (30) ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (Single Use Plastic - SUP) இற்கு எதிராக ஒரு மாபெரும் விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. 
இந் நிகழ்வானது மாவனல்லை பிரதான பஸ் தரப்பிடத்தில் மாவனல்லை நகர சபை, மாவனல்லை பிரதேச செயலகம் மற்றும் மாவனல்லை பொலிஸ் நிலையத்தின் ஆதரவுடன் ந‌டைபெற்ற‌து.

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் இனால் ஏற்படும் தீங்குகள் பற்றியதொரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அவற்றிற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த (eco-friendly) மாற்றீடுகளை அறிமுகப்படுத்தி அம்மாற்றீடுகளைப் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்கும் நோக்கங்களை அடி‌ப்படையாகக் கொண்டே இச்செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ரீ-ட்ரீ ஸ்ரீலங்கா குழுவின் இப் பாரிய முயற்சியை மாவனல்லை நகர சபை செயலாளர் திருமதி தீபா தயங்கனி மற்றும் மாவனல்லை பிரதேச செயலக செயலாளர் திருமதி பிரியங்கனி பெதன்கொட ஆகியோர் அங்குரார்ப்பண நிகழ்வின் போது பெரிதும் பாராட்டினர்.

இவ் விழிப்பூட்டல் நிகழ்வானது சிறார்களின் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் இற்கு எதிரான உரை, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் இனால் ஏற்படும் தீய விளைவுகள் சம்பந்தமான ஆக்கபூர்வமான காட்சிகள், மாற்றீடுகளை அறிமுகப்படுத்தும் விதத்திலான ஒரு விற்பனையகம் மற்றும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் சம்பந்தமான ரீ-ட்ரீ ஸ்ரீலங்கா குழு அங்கத்தவர்களின் பூரண விளக்கம் போன்ற பல சுவாரஸ்யமான அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.

அதே சமயத்தில், இக் குழுவினால் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் சம்பந்தமான ஒரு சுவர் ஓவியமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க பங்களித்த மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய நன்கொடையாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாவனல்லைப் பிரதேச பொது மக்கள் என அனைவருக்கும் ரீ-ட்ரீ ஸ்ரீலங்கா அமைப்பு தனது சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
 
ஹஸ்பர் ஏ ஹலீம்
 
 

Comment


மேலும் செய்திகள்

  • சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    Super User 03 September 2023

    சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...

  • எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    Super User 03 September 2023

      எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...

  • ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    Super User 28 March 2023

    நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...

  • துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    Super User 08 February 2023

    துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...

  • வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    Super User 08 February 2023

    அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...

  • 75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    Super User 08 February 2023

    75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...

  • இலங்கையின் டொலர் கையிருப்பு  11.7% அதிகரிப்பு

    இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

    Super User 08 February 2023

    2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...

  • GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    Super User 08 February 2023

    இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...

  • துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    Super User 06 February 2023