Sunday, 16, Jun, 9:07 PM

 

இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (GGGI) இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

இந்த ஒப்பந்தமானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகமும் பொதுச்சபையின் தலைவரும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனச் சபையின் தலைவருமான பான் கி மூன் ஆகியோர் முன்னிலையில் நேற்று (07) பிற்பகல் கைச்சாத்திடப்பட்டது.

அரசாங்கமும் GGGI யும் பசுமை வளர்ச்சி தொடர்பான முயற்சிகள் குறித்த திட்டங்களை திறம்பட வடிவமைப்பதற்கு ஏதுவாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் சார்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவும் GGGI சார்பாக அதன் பணிப்பாளர் நாயகம் பிராங் றிஜ்ஸ்பெர்மன் (Frank Rijsberman ) ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.

GGGI யின் உறுப்பினராக இலங்கை 2019 ஆம் ஆண்டு இணைந்து கொண்டது. வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான மற்றும் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் GGGI தன்னை அர்ப்பணித்துள்ளது.

குறைந்தளவு காபனைக் கொண்ட பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி தமது உறுப்பினர்கள் மாற்றமடைவதை ஊக்குவிக்கும் வகையில் கொள்கை ஆலோசனைகள், பசுமை திட்டங்களின் அபிவிருத்திக்கு அவசியமான தொழில்நுட்ப உதவி, கொள்கைகள் மற்றும் ஒழுக்க விதிகள், பசுமை வளர்ச்சி செயற்திட்டங்களை அமுல்படுத்தல், அறிவை பகிர்ந்து கொள்ளல், பசுமை முதலீடுகளை திரட்டுதல் உள்ளிட்ட பசுமை வளர்ச்சியுடன் தொடர்புபட்ட பல விடயங்களை GGGI முன்னெடுக்கின்றது.

இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியொங், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, ஜனாதிபதியின் ஆலோசகர் ஆனந்த மலவிதந்திரி, GGGI பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comment


மேலும் செய்திகள்

 • சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

  சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

  Super User 03 September 2023

  சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...

 • எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

  எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

  Super User 03 September 2023

    எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...

 • ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

  ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

  Super User 28 March 2023

  நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...

 • துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

  துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

  Super User 08 February 2023

  துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...

 • வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

  வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

  Super User 08 February 2023

  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...

 • 75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

  75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

  Super User 08 February 2023

  75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...

 • இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

  இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

  Super User 08 February 2023

  2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...

 • GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

  GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

  Super User 08 February 2023

  இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...

 • துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

  துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

  Super User 06 February 2023