Sunday, 16, Jun, 8:03 PM

 

அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துகின்ற போது அந்த சந்தோஷத்தால் அவர்களது கண்களில் ஏற்படுகின்ற ஆனந்தத்தைப் பார்த்து நமக்குள்ளே அந்தக் கனத்தில் ஒரு பெரும் பரவசம் வருமே…அதனை எப்படி விளிப்பது….எப்படி விவரிப்பது என்று விடை தெரியாமல் விழி பிதுங்கினால் அதுதான் துல்கர் ஸமான், பார்வதி, அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு, சுபின் சாகிர் என துறு துறு சுறு சுறு என்று 2015ல் வெளியான இயக்குனர் மார்ட்டின் பிரக்கெட்டின் “சார்லி” படம்.

துல்கர் ஸமானின் மற்றுமொரு ட்ரான்ஸ்ஃபோர்மேஷன் சார்லி. சீரியஸ், மிடீயம் சீரியஸ், சொக்லெட் பையா, கொமடி ஜோனர் என்று பயணித்தவரின் சாலையில் எப்பவும் பார்த்தாலும் துள்ளலும் துடிப்புமாக ஓரிடத்தில் நிற்க முடியாமல் சதாவும் ஒரு நதி போல நாடோடி வாழ்ககைக்குள்ளே அன்றாட சந்தோதஷத்தில் ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு அற்புதமான இளைஞனாக வருகின்றார் துல்கர். கரக்டருக்கு அப்படியே ஃபிட் ஓன் ஆகி விடுகின்ற அத்தனை சாமுத்ரிகா லட்சணங்களோடும் அவரது சுறு சுறு பயணத்தில் நம்மையும் அழைத்துச் செல்லுகின்றார்.

படத்தில் தல்கருக்கு இலட்சியமென்ற ஒரு ஐட்டமோ, சாதிக்க வேண்டுமென்ற ஒரு வெறித்தன சமாச்சாரமோ, எதிர்காலம் இப்படித்தான் இருக்க வெண்டுமென்ற திட்டமோ நமது எதிர்காலம் எப்படியிருக்கப் போகின்றது என்ற அச்சமோ இல்லாமல் ஓரிடத்தில் நிற்காமல் அடிக்கடி பல இடங்களுக்கு ஒரு பறவையைப் போல ஒரு கங்காருவைப் போல பாய்ந்து பறந்து வாழ்ந்த கொண்டிருக்கின்றார். துல்கரை இந்த மாதிரி வேறெந்தப்படத்திலும் எனேர்ஜெட்டிக்காக டைனமிக்காக நான் பார்த்ததே கிடையாது.

தான் சந்திக்கின்ற ஃபெட் அப் பேர்சனாலிட்டிகளுக்கு இன்னும் வாழ வேண்டுமென்ற வேட்கையை விதைக்கின்றார். தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்று முயல்கின்ற வாழ்வின் வெறுப்பாளர்களை பேசி ஒரு வழிக்கு கொண்டு வந்து அவர்களுக்கு வாழ்வின் மீது ஆசையையும் பிடிப்பையும் ஊட்டுகின்றார். எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை மட்டுமெ எதிர்பார்த்தக் கொண்டிருக்கின்ற பெண்ணை படகில் அழைத்துச் சென்று இரவுக்கடலின் அழகைக்காட்டுகின்றார். அவரது பிறந்த நாளை பொறித்த மீன் வெட்டி அவருக்கு ஊட்டி கொண்டாடுகின்றார். சொந்த தகப்பனாலேயே விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்படவிருக்கின்ற சிறுமியை காப்பாற்றி தானே வளர்க்கின்றார். ஆதரவற்று கை விடப்பட்ட முதியோர்களை தேயிலையும் தேயிலை சார்ந்த இடத்தில் சல சலவென்று ஓடுகின்ற நதிக்குப் பக்கத்தில் அமைந்துள்ள கொட்டேஜுக்கு கொண்டு வந்து அவர்களை அரவணைக்கின்றார்.

அன்பு மட்டுமே ஒரே ஆயுதம் இங்கே அடுத்தவர்களது இதயங்களை ஆக்கிரமிப்பதற்கு என்று படத்தின் பல இடங்களில் பளிச் பளிச்.

நகரத்துக்கு வருகின்ற பார்வதி ஒரு அறையெடுத்து தங்கிக் கொள்ளுகின்றார். அந்த அறை சற்று வித்தியாசமானதாக இருக்கின்றது. அந்த அறை அமைந்துள்ள கட்டட சூழலே ஒரு வகையான அமானுஷ்யத்துக்குள்ளே ஜென்வாசம் செய்வதாகத் தெரிகின்றது. தூசால் ஆலிங்கனம் செய்யப்பட்ட பல புத்தகக் கட்டுகள்….பொம்மைகள்…என்று நிறைய ஆச்சர்யங்கள். தூசு படிந்து போய்க்கிடக்கின்ற. அறையை சுத்தம் செய்கின்றார் பார்வதி. அப்போது அவரது கைக்கு ஒரு டயறி அகப்படுகின்றது. டயறி எழுதப்படாமல் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு படம் வரையப்பட்டிருக்கின்றது. அந்தப்படங்கள் மூலம் ஒரு கதை சொல்லப்படுகின்றது. படு சுவாரஸ்யமாக படங்களைப் பார்த்து அந்தக்கதையை உணர ஆரம்பிக்கின்றார் பார்வதி. ஒரு கட்டத்தில் படம் முக்கியமடான ஒரு திருப்பத்தில் திடீரென்று முடிவடைந்து விடுகின்றது.

அடுத்து இந்தக்கதையில் என்ன நடந்திருக்குமென்ற ஆர்வம் பார்வதிக்குள்ளே பிகிலேக எப்படியாவது அந்தக் கதைக்குரிய ஹீரோவை சந்தித்து மிகுதிக்கதையினை அறிய வெண்டுமென்ற எட்ரினலின் அவருக்குள்ளே சுரக்க அரம்பிக்கின்றது.

அந்த அறையில் முன்னர் கொஞ்ச நாள் இருந்தவன் சார்லி. இப்போது அவன் எங்கே இருக்கின்றான் என்ன செய்கின்றான் என்ற பார்வதியின் தேடலே மிகுதிப் படமென தொடர்கின்றது. படம் பூராவும் துல்க்கரின் வித்தியாசமான மேனரிசங்களும் வாழ்வு பற்றிய அவனது வித்தியாசமான கருதுகோள்களும் கனிப்புகளும் அசரடிக்கின்றது. நம்மை சுற்றியுள்ள சக மனிதர்களை திடீர் திடீர் என்று எதிர்பாராத விதமாக சஸ்பென்ஸ் சந்தோஷம் கொடுத்து அந்த சஸ்பென்ஸ் சந்தோஷ நொடியில் நமக்கு வருகின்ற பேரானந்தமே பெரும் பரவசம் என்று நம்புகின்ற துல்கர் அதற்காகவே வாழந்து கொண்டிருக்கின்ற ஆகிருதி.

துல்க்கரின் வித்தியாசமான ஆடைகள்…வித்தியாசமான உடலமைப்பு…சதாவும் எக்சைட்டிங சென்சிட்டிவிட்டி என்று படத்தை பார்க்கும் நமக்குள்ளேயே எனர்ஜி எகிறுகின்றது. ஒரு கட்டத்தில் தனது மரண அறிவித்தலை தானே கொடுத்து பத்திரிகைகளில் வெளி வருகின்ற தனது சொந்த மரண அறிவித்தலை பார்த்து ரசிப்பான். அதற்கு தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் துல்கர் சொல்லுகின்ற காரணங்கள் சுவாரஸ்யமானவை.

தன்னால் பராமரிக்கப்படுகின்ற வயசாளிகளுல் ஒருவரான முன்னை நாள் ரிட்டையர்ட் ஆரமியான நெடுமுடிவேணு தனது இளமைக்கால காதலி பற்றியும் கடைசி வரைக்கும் அவளிடம் தான் காதலைச் சொல்லாமலே போன துயர் பற்றியும் காண்கின்ற எல்லோரிடமும் சொல்லிக் கொண்டேயிருப்பார். அந்தக்காதல் தந்த சோகத்தில் அவர் திருமணமின்றி தனிக்கட்டையாகவே வாழ்ந்து கொண்டிருப்பார்.

அவரது துயரமான அந்தக்கதையே அந்த மடத்தில் ஒரு கொமடியாக மாறிப் போயிருக்கும். எப்போது பார்த்தாலும் அதே பழைய கதையையே நெடுமுடிவேணு ஓட்டிக் கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் கிறிஸ்தவ தேவாலய சிஸ்டர்களை துல்கர் தனது மடத்துக்கு அழைத்து வருவார். அந்த சகோதரிகளுல் ஒருவர் நெடுமுடிவேணு காதலைச் சொல்லாமலே கடந்து பொன ஒரு தலைக்காதலியும் இருப்பாள். வயதாகிப் போன அந்த சிஸ்டர் தெவன் சேவைக்காகவே தன்னை முழுசாக அர்ப்பணித்திருப்பார். துல்கர் திட்டமிட்டே அந்த சகோதரிகளை அழைத்து வந்திருப்பார். நெடுமுடி வேணுவை அவரது பழைய ஆளிடம் தனியே பேச விடுவார்.

தனது முன்னை நாள் காதலி கன்னியாஸ்’திரயாகி விட்டாரா என்பதனை பார்க்கின்ற அவருக்கு ஷொக்கின் வர்க்கம்….ஷொக்கின் கனம். அதிர்ந்து போய் விடுவார் மனுஷன். அவரது முன்னை நாள் காதலி இன்னை நாள் கன்னியாஸ்திரியிடம் மனம் விட்டுப் பேசுவார். அதன் பின்னே அவர் தனியே தனது அறைக்கு சென்று யாரிடமும் பேசாமல் முடங்கி விடுவார். தூரத்தே இதனை நின்று பார்க்கின்ற துல்கரின் உதடுகிள் புன்னகை. ஒரு ஜீவனின் பல தசாப்த காலத்தைய ஆசையை நிவேற்றி விட்ட பூரிப்பு அவனுக்குள்ளே.

இப்படி படத்தில் பல ஹார்ட் டச்சிங் காட்சிகள். துல்கரின் வாழ்வு பற்றிய கொன்செப்ட்டும் அவன் வாழ்கின்ற விதமும்ட நம்மை பொறாமைப்பட வைக்கி;னறது. அசத்தலான அலுப்பில்லாத திரைக்கதை. ஒரு திரல்லர் மூவிக்கு நெருக்கமாக ஆனால் வாழ்வின் இன்னோர் பக்கத்தை நமக்கு வாசித்துக்காட்டுகின்ற திரைக்கதை.

சக மனிதனுக்காக வாழ்வதும் அவனை சந்தோஷப்படுத்தி அந்த சந்தோஷத்தில் நாம் பரவசிப்பதுவும் இந்த உலக வாழ்வின் மிக உன்னதமான தருணங்கள் என்பதனை கன்னத்தில் மெதுவாய் முத்தமிட்டு நமக்கு கற்றுத்தருகின்றான் சார்லி.

கிண்ணியா சபருள்ளாஹ்
2019-11-02

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners