Sunday, 16, Jun, 8:17 PM

 

கிண்ணியா சபருள்ளா
மனுஷன் பேய்க் கொமடி படங்களாக சுட்டுத் தள்ளிய பின்னர் பேய்கள் மீதிருந்த அபிப்பிராயமும் பேய்ப் படம் பார்த்து முடித்த பின்னர் தனியாக ஒன்னுக்கடிக்க பாத்ரூம் போகவே பயப்பட்ட கனங்களும் போயே போய் விட்டன.
முனி, காஞ்சனா, சிவலிங்கா போன்ற படங்களுக்குப் பின்னர் Super Natural, Paranormal படங்கள் மீதிருந்த மரியாதை ஆர்வம் கிட்டத்தட்ட எல்லாமே பெட்டியைக் கட்டிக் கொண்டு சொந்த ஊர் போய் சேர்ந்து விட்டன. பெரும்பாலும் நான் இந்த பேய் ஜோனர் படங்களை பார்ப்பது கிடையாது.
ராகவா லோரன்ஸ் மட்டுமல்ல அதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. பேய்ப் படங்களென்று போட்டு வெறும் மிரட்டலான இசையை வைத்துக் கொண்டும், கடைசியில் ஆத்தாவின் துணை கொண்டு பேய்களை தோற்கடிக்கின்ற கிளைமேக்ஸ் கண்றாவியோடும் பேய்ப் படங்களில் நமது தமிழ் சினிமாக்கார பார்ட்டிகள் நம்மை பயமுறுத்துகின்ற அறுவையையும் சகிக்க முடிவதில்லை. அதனால்தான் பராநோர்மல் படங்கள் எப்போதுமே எனது இன்டரெஸ்டிங் பட்டியலில் இருந்தது கிடையாது.
ஆனால் அண்மையில் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் ரத்தீந்திரன் பிரசாத்தின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோரின் (இவர் மட்டும்தான் இந்தப் படத்தில் பழக்கமான முகம். மற்றெல்லோரும் அறிமுகவாசிகள்) நடிப்பில் வெளியான “பூமிகா” படம் லைட்டாக விழிகளை உயர்த்தி அடப் போட வைக்கின்றது.
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பூமி மாசைடதல், மரங்களை வெட்டி வீழ்த்துகின்ற கொடுமையென்று Eco Horror ஆக பூமிகாவை எடுத்திருக்கின்றார்கள். பேய்ப்படத்தில் புதிய தளம். பேய்ப் பட ஜோனரில் நமக்கு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பையும் சுற்றுப்புறச் சூழலை மனிதர்கள் சூறையாடுகின்ற போது பூமி நம்மை எப்படி பழிவாங்குகின்றது என்பதனையும் இயற்கையான சூழலுக்கு ஒவ்வாத செய்றகைத்தனங்களை வலிந்து புகுத்துகின்ற பொது ஏற்படுகின்ற விபரீதங்களையும் இசையாலும் திரைக் கதையாலும் அச்சமூட்டி பேய்ப்பட விருந்து வைத்திருக்கின்றார்கள்.
தமிழில் பேய்ப்பட ஜோனரில் இது கொஞ்சம் புதுசு. புதிய முயற்சி. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ் அவரது கணவர் அவர்களது வாய் பேச முடியாத நான்கு வயதுப் பையன் கணவரது தங்கை மற்றும் கட்டடக் கலைஞராக வருகின்ற ஐஸ்வர்யாவின் தோழி என ஐந்து பேரும் செழித்து அடர்ந்து வளர்ந்து பல நூறு ஏக்கர் கணக்கிலிருக்கின்ற காட்டு பங்களாவுக்கு வந்து தங்குகின்றார்கள்.
அந்தக் காட்டினை அழித்து அங்கு கட்டடங்கள் கட்டி; அதனை விற்கின்ற அமைச்சரின் திட்டத்தை அமுலாக்குகின்ற கட்டட ஒப்பந்தக்காரராக ஐஸ்வர்யாவின் கணவன். அவர்கள் தங்கியிருக்கின்ற பங்களாவும் சற்றயிருக்கின்ற கட்டடங்களும் ஒரு காலத்தில் பாடசாலையாக இயங்கி வந்தது. பின்னர் பாசடாலை காலியாக்கபட்டு அதனை சுற்றி வர இருக்கின்ற வீடுகளில் குடியிருக்கின்றர்களும் அந்த இடத்தை விட்டுப் போய் அந்த இடமேபெருங்காடாக மாறி விட்டிருக்கின்றது. இப்போது அந்தக் காட்டை அழித்து கட்டடம் கட்டி அதனை விற்பதற்காக ஐஸ்வர்யாவின் கணவர் குடும்பத்தோடு வந்திருக்கின்றார். எல்லாம் காசு.
படத்தின் முதற் காட்சியிலேயே காரில் வந்து கொண்டிருக்கின்ற ஐஸ்வர்யா ராஜேஷின் கணவரது நண்பன் விபத்தில் சிக்கி ஸ்தலத்திலேயே பலியாகி விடுகின்றான். நண்பர் இப்படி இறக்க பங்களாவில தங்கயிருக்கின்ற முதல் ராத்திரியிலேயே ஐஸ்வர்யாவின தோழியின் செல்லுக்கு இறந்தவன் செல்லிலிருந்து வட்ஸ்அப் மெசேஜ் வந்த வண்ணமேயிருக்கின்றது. இதிலிருந்து ஆரம்பமாகின்றது படத்தின் திகில்.
அந்த இடத்தை சுற்றி அந்தக் காடு முழுவதும் அவர்கள் தங்கியிருக்கின்ற ஒரு காலத்தில் பாடசாலையாக இருந்த கட்டடத்தில் இருக்கின்ற எல்லா மர்மங்களும் மெல்ல மெல்ல அந்த இரவுக்குள்ளாக அவிழ ஆரம்பிக்கின்றன.
முழுக்க முழுக்க பூமியை பாதுகாப்பதும் அதன் அழகான சூழலை பாதுகாப்பதுமாக படம் நகருகின்றது. படத்தின் ஃப்ளாஷ்பேக்கில் அழகான பாடசாலை வருகின்றது. பாடசாலையைச் சுற்றி அற்புதமான பச்சைப் பசேரென்ற சூழல். எல்லா இடங்களிலும் மரங்கள். மரங்கள்…பசும் பல் தரைகளென ஒளிப்பதிவு அபூர்வமான உணர்வுகளை அள்ளிக் கொடுக்கின்றது. அந்தப் பாடசாலை நூலகத்தில பணி புரிகின்றவரின் வளர்ப்பில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி. அவள் பூமிகா. அவளைச் சுற்றியே ஃப்ளாஷ் பேக் கதை நகருகின்றது.
அவள் மரங்களை நேசிப்பவள். காடுகளை காதலிப்பவள். பூக்களிடம் பாசம் பாராட்டுபவள்..பறவைகளை செடிகளை கொடிகளை பூச்சிகளை நேசிப்பவள்…கண்டதையும் வரைபவள்..தனது உள்ளத்தை சித்திரங்களூடாக வெளிக்காட்டுகின்ற விசித்திரமானவள். கட்டுப்பாடுகள் எதுவும் அற்றவள். தன்ளை கட்டுப்படுத்துகின்றவர்களை செயற்கைத் தனமாக ஒழுங்கமைக்கின்றவர்களை வெறுப்பவள். ஒரு ஒழுங்கமைப்புக்குள்ளே வராதவள். அவளை ஒழுங்கமைக்க நினைத்தாள் அதனை தாங்க மாட்டாமல் தலையிலடித்துக் கொண்டு அழுபவள்.
பூமிகா…மனுஷி கிடையாது. அவள்தான் இந்த பூமி. படத்தில் பூமிகா ஒரு குறியீடு. இந்தப் படத்தில் பூமிகா என்ற கதாபாத்திரம் கதாபாத்திரமே கிடையாது. அது ஒரு குறியீடு..ஆழமாக பார்க்கின்றவர்களுக்கு அது புரியும்;. பூமிகாதான் இந்த பூமி. காட்டின் காதலோடு தனது எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு செயற்கையை உள்வாங்க மறுக்கின்ற பூமிதான் பூமிகா. பூமிகாதான் பூமி. இந்தப் படத்தில் Magical Realism and Surrealism த்தினை பூமிகாவை காட்டுகின்ற இடங்களில் உணர்ந்தேன். புதிய அனுபவத்தை தருகின்றன இந்தப் படத்தில் பூமிகா வருகின்ற காட்சிகள்.
கோப்ரேட் சிநதனையுள்ள கேடிக் கூட்டம் பாடசாலை நிர்வாகத்துக்கு வருகின்ற போது சுற்றியிருக்கின்ற காட்டை அழித்து வியாபாரம் பார்க்க நினைத்து அதன் ஆரம்ப கட்டமாக பெரு மரமொன்ற வெட்டி வீழ்த்துகின்ற போது அதனைத் தாங்காமல் மரத்திலேயே தலையை மோதி இறந்து விடுகின்ற பூமிகாவின் மரணத்தோடு ஆரம்பமாகின்றன அத்தனை ஆச்சர்யங்களும் திகில்களும்….பூமிகா இற்நத பின்னர் அங்கே அந்த வனத்தை பாதுகாக்கின்ற ஆவியாக சுற்றியலைந்து கொண்டிருக்கின்றாள். அந்தக் காட்டை அழிக்க நினைத்த அத்தனை பேரும் மர்மமான முறையில் இறந்து விடுகின்றார்கள்.
யாரிந்த காட்டை இயற்கையை பூமியின் இயல்பை அழிக்க முன் வருகின்றாரோ அவரை இந்த பூமி பழி வாங்கும் என்பதே படத்தின் அடிநாதம். அதனை திகில் கலந்த பேய்ப் படமாக தந்திருக்கின்றார்கள். ரசிக்கலாம். வெறுமனே ச்சும்மா பொழுது போக்குக்காக என்றில்லாமல் சமூகத்துக்குத் தேவையான செய்தியோடு ஹொரர் படத்தை தந்த காரத்திக் சுப்புராஜ் என்ட் படத்தின் இயக்குனருக்கு நன்றிகள்.
படத்தில ஆங்காங்கே சில ஓட்டை உடசல்கள் இருக்கின்றன. உதாரணமாக நீண்ட காலமாக இயங்கி வந்து கொண்டிருக்கின்ற ஒரு அரச பாடசாலையானது பூமிகா என்ற ஆட்டிசப் பெண் இறந்த பின்னர் மூடப்படுவது பாடசாலையை சுற்றி குடியிருக்கின்றவர்கள் அந்த இடத்தை விட்டு விட்டு வேறிடங்களுக்கு குடி பெயர்வது, பாடசாலை மூடப்பட்டு இத்தனை காலங்களாக ஏன் அதனை அரசாங்கம் கவனத்திற கொள்ளவேயில்லை, பலர் அங்கே மர்மமான முறயைில் இறந்தும் ஏன் பொலிசார் அவை பற்றி கொஞ்சமேனும் விசாரண செய்யவில்லை..அவர்களது பொஸ்ட் மோர்ட்டம் அறிக்கைகளுக்க என்னவாயிற்று, மற்றும் இத்தனை தூரம் இவவ்ளவு நடந்து மீடியாக்களில் கடுமையாக அவை அடிப்பட்டு பூமிகா மரணம் பாடசால மூடு விழா என்பவை இன்ச் சைசுக்கும் ஏன் ஐஸ்வர்யா ராஜேஷ் என்ட் கோ அறிந்திருக்கவில்லை….அங்கேயே பிறந்த அங்கேயே வளர்ந்த பங்களாவில் பணி புரிகின்ற அவர்களது வேலைக்காரனாக வருகின்றவன் ஏன் அங்கே வருகின்ற இவர்களிடம் ஆதி முதல் அந்தம் வரை எல்லாம் தெரிந்திருந்தும் ஆரம்பத்திலேயே எதுவுமே சொல்லவில்லை போன்ற லொஜிக்லான ஏன்கள் நிறயை இருந்தும் இந்தப்படம் சூழற் பாதுகாப்பை அடிநாதமாகக் கொண்டு ஒரு Eco horror Movie யாக வந்திருப்பது தமிழுக்கு புதிது.
கிண்ணியா சபருள்ளா
2021-08-24

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners