Wednesday, 15, Oct, 1:05 PM

 

 

கிண்ணியாவின் முதல் முஸ்லிம் ஆசிரியர்கள் இருவராவர். அவர்களில் ஒருவர் மர்ஹூம் ரீ.ஏ.எம்.இஸ்ஹாக். மற்றையவர் காஸீம்பாவா மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட மர்ஹூம் முகம்மது இப்ராஹீம் அவர்கள். இவர் 1953 முதல் 1980 வரை சுமார் 27 வருடங்கள் பல்வேறு பாடசாலைகளில் கல்விப்பணி புரிந்துள்ளார்.

மர்ஹூம்களான முகம்மது சுல்தான் - கயாத்தும்மா தம்பதிகளின் புதல்வராக 1923.10.23ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் இவர் பிறந்தார். தற்போதைய கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஒரு பகுதியில் இயங்கிய பெரிய கிண்ணியா அரசினர் கலவன் பாடசாலையில் கல்வி கற்றார். கிண்ணியாவூக்கு அறிவூ ஒளி ஊட்டிய அமரர் காசிநாதர் (முருகுப்பிள்ளை வாத்தியார்) அவர்களின் முதல் மாணாக்கர்களுள் ஒருவராக இவரும் திகழ்ந்தார்.

அரசாங்கப் பரீட்சை அப்போது 8 ஆம் தரத்திலேயே எழுத வேண்டும். இரண்டாம் உலக மகா யூத்தம் நடைபெற்ற காலத்திலேயே இவர் தனது 8 ஆம் தரப் பரீட்சையை எழுதியூள்ளார். பரீட்சை முடிந்து வீடு திரும்பிய வேளையில் ஜப்பானின் குண்டு வீச்சு தாக்குதலுக்கு பயந்து இவரது குடும்பத்தினர் இடம் பெயரத் தயார் நிலையிலிருந்தனர். அவர்களோடு சேர்ந்து இவரும் பூவரசந்தீவூப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

பலநோக்குக் கூட்டுறவூச் சங்க கிளை முகாமையாளராக தனது அரச பணியை ஆரம்பித்த இவர் அதன்பின் 1953.04.01 ஆம் திகதி ஆசிரியராக நியமனம் பெற்றார். இதன் மூலம் கிண்ணியாவின் முதலாவது முஸ்லிம் ஆசிரியர்களுள் ஒருவர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.

பெரிய கிண்ணியா அரசினர் ஆண்கள் பாடசாலையில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்த இவர் சிலாபம், கலாவெவ, மதவாச்சி, கெக்கிராவ, புழுதிவயல் (புத்தளம்) ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் உட்பட 14 பாடசாலைகளில் கல்விப் பணி புரிந்துள்ளார்.

1959 ஆம் ஆண்டு கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபராக இவர் நியமனம் பெற்றார். இதன் மூலம் கிண்ணியாவின் முதலாவது அதிபர் என்ற பெருமையையூம் இவர் பெறுகின்றார். இதனை விட பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயம்இ குட்டிக்கராச்சி இஹ்ஸானியா வித்தியாலயம், நடுஊற்று அல் அஃலா வித்தியாலயம் ஆகியவற்றிலும் அதிபராகக் கடமையாற்றியூள்ளார்.

நடுஊற்று அல் அஃலா வித்தியாலயத்தின் முதலாவது அதிபரான இவர் அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு அரும் பணியாற்றியூள்ளார். இதற்காக பாடசாலைக்கு முன்னால் உள்ள காணியில் தனது குடியிருப்பை அமைத்துள்ளார்.

மர்ஹூம் கவிஞர் அண்ணல் (எம்.எஸ்.எம்.சாலிஹ்) இவரது உடன் பிறந்த சகோதரராவார். சதக்கும்மா இவரது வாழ்க்கைத்துணைவி. மர்ஹூம் பேராசிரியர் கே.எம்.எச்.காலிதீன் இவரது மருமகன்களுள் ஒருவர்.

அப்துல் ஜப்பார் (முன்னாள் மனேஜர் - கிபாரி ஆசிரியரின் தந்தை)இ அப்துல் அஸீஸ் (ஓய்வூபெற்ற ஆசிரியர்), மர்ஹூம் முகம்மது இக்பால், ஐனுல் துஹ்பா, முகம்மது நஜீம், முகம்மது வபா, முகம்மது சாபி (ஆசிரியர்), ஐனுல் சிபாயா ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.

கிண்ணியாவின் செல்வாக்கு மிக்க பரம்பரையில் வந்த மர்ஹூம் இப்ராஹீம் (காசீம்பாவா மாஸ்டர்) 1980 02 29 ஆம் திகதி காலமானார். அன்னாரின் ஜனாஸா கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேடல்:

ஏ.சி.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners