Thursday, 16, Oct, 9:56 PM

 

திருகோணமலை-கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சகொடித்தீவு பிரதேசத்தில் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனி 50 கிலோ கிராம் நிறையுடைய 120 மூடைகள் இன்று (09) கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவற்றுக்கு முத்திரை இடப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோரல தெரிவித்தார்.

இரகசியமாக கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டு குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பிறிதொரு பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலையில் குறித்த 120 சீனி மூடைகளும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் உரியநபருக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின்படி உரிய அதிகாரசபையால் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சில பொருட்கள் கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக விற்கப்பட்டு வருவதாக தமக்கு முறைப்பாடு பொதுமக்களால் செய்யப்பட்டுள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு அவ்வாறான பிரதேசங்களை இனங்கண்டு சுற்றிவளைப்புகள் மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தாம் அறிவுறுத்தல் வழங்கியதாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் கையிருப்பில் பொருட்களை வைத்துக்கொண்டு அவற்றை மொத்த ,சில்லறை அடிப்படையில் விற்பனை செய்யாமல் செயற்கையான முறையில் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அவற்றை பதுக்கி வைத்திருப்பது அனுமதிக்க முடியாது. மக்கள் பொருளாதார அசௌகரியங்களுக்கு மத்தியில் தற்போது வாழ்ந்து வருவதாகவும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்களை வழங்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இவ்வாறான சுற்றிவளைப்புகள் மாவட்டத்தினுடைய பல்வேறு பிரதேசங்களிலும் தொடராக மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பாவனையாளர்களது நலன் தொடர்பில் கூடிய அக்கறை கொண்டு இச்செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு உரிய அறிவுறுத்தல் தம்மால் இது தொடர்பில் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

மாவட்டத்தினுடைய ஏதாவது ஒரு பிரதேசத்தில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற பொழுதும் அதே போன்று நெல் அளவுக்கதிகமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது அல்லது களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பான விபரங்கள் மக்களுக்கு தெரியுமெனின் அது குறித்து மாவட்ட செயலகத்தையோ, பிரதேச செயலகத்தையோ அல்லது பாவனையாளர்கள் அதிகார சபையையோ தொடர்புகொண்டு குறித்த தகவல்களை வழங்குமாறு இதன்போது அரசாங்க அதிபர் மக்களிடம் வேண்டிக் கொண்டார்.

இன்று நடைபெற்ற குறித்த சுற்றிவளைப்பின் போது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலுவலக விசாரணை உத்தியோகத்தர் தனசேகரன் வசந்தசேகரன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

அப்துல்சலாம் யாசீம்

Comment


மேலும் செய்திகள்

  • சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    Super User 03 September 2023

    சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...

  • எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    Super User 03 September 2023

      எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...

  • ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    Super User 28 March 2023

    நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...

  • துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    Super User 08 February 2023

    துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...

  • வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    Super User 08 February 2023

    அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...

  • 75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    Super User 08 February 2023

    75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...

  • இலங்கையின் டொலர் கையிருப்பு  11.7% அதிகரிப்பு

    இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

    Super User 08 February 2023

    2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...

  • GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    Super User 08 February 2023

    இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...

  • துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    Super User 06 February 2023