கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைக்கு மத்தியிலும் ஊடகவியலாளர்கள் மகத்தான பணிகளை நாட்டு மக்களுக்காக மேற்கொண்டு வருகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும் தேசத்தின் கௌரவம் உரித்தாக வேண்டுமென்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
'சர்வதேச ஊடக சுதந்திர தினம்' இன்றாகும். உலகின் நான்காவது சக்தியாகக் கருதப்படும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகுமென்றும் ஊடகத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'சுபீட்சத்தின் தொலைநோக்கு' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களின் பணிகளுக்கு உயர்ந்தபட்ச கௌரவமும் வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊடகவியலாளர்களுக்கென நடைமுறைப்படுத்தப்படவிருந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனதாகவும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
Comment