திருகோணமலைமாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன.
பிரதமர்ரணில்விக்ரமசிங்கதலைமையில்இந்தநிகழ்வுகள்எதிர்வரும்27ஆம்திகதி இடம்பெறவுள்ளதாக தேசியகொள்கைகள், பொருளாதாரஅலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள்அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளதாவது:
ஊடக அறிக்கை
தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு
கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் திருகோணமலை விஜயம் அபிவிருத்தித்திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு
கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்;க அவர்கள் திருகோணமலை மாவட்டத்திற்கு 27.06.2019 ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற முறையில் அமைச்சின் பல்வேறு வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளிக்கவுள்ளார். திருகோணமலை மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட 1,000 வீடுகளில் முதல் கட்டமாக 400 வீடுகளில் 200 வீடுகள் முடிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், 200 வீடுகள் முடிவுறும் நிலையில் உள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி அவர்கள் தெரிவித்தார். இதில் முடிவுறுத்தப்பட்ட வீடுகள் 27.06.2019 ஆம் திகதி தம்பலகாமத்தில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
மேலும், இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய அகதிகளில் புள்ளிகளின் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட 450 அகதிக்குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா செலவில் வீடுகளை அமைப்பதற்கான பயனாளிகள் தெரிவுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. இந்த வீட்டுத்திட்டங்கள் பயனாளிகளினால் முன்னெடுக்கப்படும் பாரம்பரியமான கல்வீடுகளாக காணப்படும் என தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி அவர்கள் தெரிவித்தார்.
மேலும், வடமாகாணத்தில் 378 தொண்டர் ஆசிரியர்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் 739 தொண்டர் ஆசிரியர்களுக்குமான நிரந்தர நியமனங்களும் வழங்கப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் முன்னெடுக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது. யுத்த காலத்தில் பல சிரமங்களுக்கு மத்தியில் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றியவர்களுக்கு சிறப்பு சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டமை ஒரு நல்லிணக்க செயற்பாடாக கருதப்படுவதாக அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி அவர்கள் தெரிவித்தார்.
வே. சிவஞானசோதி
செயலாளர்
தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு
Comment