தமது வியாபார நிலையங்கள் மூடப்பட்டதனால் தாம் பாரியளவில் நஷ்டமடைந்துள்ளதாகவும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பேணி கடைகளை திறக்க அனுமதிக்குமாறும் கிண்ணியா வர்த்தக சங்கத்தினர் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவிட் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து திருகோணமலை மாவட்டம் முழுவதும் உள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தவிர்ந்த ஏனைய அனைத்து கடைகளையும் வியாபார நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comment