Wednesday, 15, Oct, 11:45 PM

 

இலங்கை நாட்டில் கொவிட் -19 தொற்றின் முதலாம், இரண்டாம் அலை கடந்து தற்போது மூன்றாம் அலை உருவாகியுள்ளது. இந்த Covid-19 தொற்றின் காரணமாக நாள்தோறும் உயிர்ச் சேதங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை அரசு, உலகெங்கும் வாழும் இலங்கை மக்களிடமிருந்து மருத்துவ உதவிப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை அன்பளிப்பாக எதிர்பார்த்து நிற்பதோடு இலங்கை தூதுவராலயங்கள் ஊடாகவும் தமக்கு உதவுமாறு அந்தந்த நாட்டில் வசிக்கும் இலங்கை மக்களிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.
இவ்வேண்டுகோளை ஏற்ற, இலங்கை முஸ்லிம்களின் கட்டார் அமைப்பு (FSMA -Q) இலங்கை தூதரகத்தின் வழிகாட்டுதலுடன் மருத்துவ ஒக்சிஜன் சிலிண்டர்களை வழங்க அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இலங்கை முஸ்லிம் சம்மேளனத்தின் அங்கத்துவ அமைப்புக்களின் நிதி உதவியுடன் (FSMA - Q) இலங்கை தூதரகத்துக்கு *60 ஒக்சிஜன் சிலிண்டர்களை* ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் துரித கதியில் மேற்கொண்டது.
கட்டாரில் இயங்கி வரும் பிற சமூக சேவை அமைப்புகள் மற்றும் நலன் விரும்பிகளால் ஏற்கனவே வழங்கப்பட்ட நன்கொடைகளை விட அதிக பெறுமதி கூடிய நன்கொடை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
சேகரிக்கப்பட்ட ஒக்சிஜன் சிலிண்டர்கள் அனைத்தும் இன்று வெள்ளிக்கிழமை (11/06/2021) கட்டார் நாட்டிற்கான இலங்கை தூதுவர் அதிமேதகு கெளரவ திரு. முஹமட் மfபாஸ் முகைதீன், அவர்களிடம் உத்தியோக பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் திரு. முஹமட் ரினோஸ் ஸாலிஹின், பிரதித் தலைவர் திரு. முஹமட் லாபீர், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இதனைப் பெற்றுக் கொண்ட கட்டாருக்கான இலங்கை தூதுவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
60 மருத்துவ ஒக்சிஜன் சிலிண்டர்கள் என்பது எம்மைப் பொறுத்தவரை நாம் எதிர்பார்த்ததை விட பெரிய எண்ணிக்கை என்றார்' மேலும் இதன் மூலம் இலங்கை நாட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களில் குறிப்பிட்ட அளவினரின் உயிரை காப்பாற்ற உதவியாக அமையும் என்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இடங்களுக்கும் இதனை பகிர்ந்து கொடுப்பதாகவும் அதேபோன்று இதற்காக பல அர்ப்பணிப்பு களையும் தியாகங்களையும் செய்த அனைவருக்கும் தாமும் அதேபோல் தூதரகம் சார்பாகவும் மனப்பூர்வமாக நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம்களின் சம்மேளனத்தின் தலைவர் திரு. முஹமட் ரினோஸ் ஸாலிஹீன் உரையாற்றுகையில், இந்த திட்டத்தை மிகவும் துரித கதியில் அதேநேரம் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஆதரவு மற்றும் பங்களிப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை அனர்த்தங்களின் போதும் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கட்டார் சம்மேளனம் பல்வேறு சமூகப் பணிகளை இலங்கையில் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
FSMA - QATAR MEDIA🔰

Comment


மேலும் செய்திகள்

  • சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    Super User 03 September 2023

    சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...

  • எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    Super User 03 September 2023

      எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...

  • ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    Super User 28 March 2023

    நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...

  • துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    Super User 08 February 2023

    துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...

  • வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    Super User 08 February 2023

    அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...

  • 75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    Super User 08 February 2023

    75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...

  • இலங்கையின் டொலர் கையிருப்பு  11.7% அதிகரிப்பு

    இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

    Super User 08 February 2023

    2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...

  • GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    Super User 08 February 2023

    இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...

  • துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    Super User 06 February 2023