Thursday, 16, Oct, 2:10 AM

 

வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றம் நிகழ்வுகளின் வரிசையில், கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் (medical Superintendent) கடமையாற்றி வந்த Dr. A.M.M.Jiffry அவர்களின் இடத்துக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த Dr. I. M. Javahir அவர்கள் நேற்று (18. 08.2021) கடமையை ஏற்றுக் கொண்டார்.
இதுவரை காலமும் MS ஆக இருந்து வைத்தியசாலையில் சேவையாற்றிய Dr. A.M.M.Jiffry அவர்கள் இடம் மாற்றம் பெறுவது வைத்தியசாலை வட்டாரத்துக்கு அதிர்ச்சியாகவும் இழப்பாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Dr. A.M.M.Jiffry அவர்களது தலைமைத்து காலப்பிரிவில் வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்கள் சாதித்த, ஆரம்பித்து வைத்த பணிகள் Dr. I. M. Javahir அவர்களின் தலைமையில் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது Jaya School கட்டிடத்தினை திருத்தியமைத்து 15 Rooms கொண்ட Partitions ஆக பிரிக்கப்பட்டுள்ளதுடன், HDU அமைக்கும் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மகப்பேற்றின் பின் பராமரிப்பு பிரிவின் (PNC) கட்டிட வேலைகளும் எமது பிரதேச தனவந்தர்களின் அணுசரனையில் கட்டப்பட்டு வருகின்றது.
இவ்வாறான பல வேலைத்திட்டங்கள் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த இடத்தில் Dr. A.M.M.Jiffry அவர்களின் சேவைகளைப் பாராட்டுவதுடன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் கிண்ணியா மக்கள் சார்பாக அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அல்லாஹ் அவருக்கு நிறைந்த கூலியையும் நல்லாரோக்கியத்தையும் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம். அவரது சேவை இந்த வைத்தியசாலைக்கு தொடர்ந்து இருக்கும் என உறுதியாக நம்புகின்றோம்.
Dr. I. M. Javahir அவர்கள் நேற்று பதவியேற்றார். அவர்களை வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் கிண்ணியா மக்கள் சார்பாக அன்போடு வரவேற்கிறோம். கிண்ணியா தள வைத்தியசாலை அவர்களது சேவைக் காலப்பிரிவில் பாரிய வளர்ச்சியைக் காணும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அவரது பணி சிறப்பாக அமைய எமது உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.
கிண்ணியா தள வைத்தியசாலை அபிவிருத்தி குழு

Comment


மேலும் செய்திகள்

  • சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    Super User 03 September 2023

    சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...

  • எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    Super User 03 September 2023

      எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...

  • ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    Super User 28 March 2023

    நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...

  • துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    Super User 08 February 2023

    துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...

  • வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    Super User 08 February 2023

    அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...

  • 75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    Super User 08 February 2023

    75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...

  • இலங்கையின் டொலர் கையிருப்பு  11.7% அதிகரிப்பு

    இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

    Super User 08 February 2023

    2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...

  • GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    Super User 08 February 2023

    இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...

  • துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    Super User 06 February 2023