அதிகரித்துத் வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இலங்கையில் ஆயுர்வேத மருத்துவமனை முறையை பயன்படுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை கப்பல்துறையில் உள்ள ஆயுர்வேத அடிப்படை மருத்துவமனையும் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ .10 மில்லியனுக்கும் அதிகமான செலவில் நவீனப்படுத்தப்பட்டது.
ஆயினும், ஆயுர்வேத மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் மகாதேவன் நிரஞ்சன் கூறுகையில், இதுவரை எந்த நோயாளியும் ஆயுர்வேத மருத்துமனைக்கு பரிந்துரைக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களை இந்த மருத்துவமனைக்கு எளிதாக அனுப்பி தேவையான சிகிச்சைசை அளிக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
திருகோணமலையின் கப்பல்துறையில் உள்ள ஆயுர்வேத அடிப்படை மருத்துவமனை, இதற்காக முழுமையாக உருவாக்கப்பட்டு நோயாளிகள் மற்றும் கிராமவாசிகளின் பாதுகாப்புக்காக பெரும் செலவில் பாதுகாப்பு வேலி மற்றும் சிசிடிவி கேமரா அமைப்பை நிறுவியுள்ளது.
மருத்துவமனையில் 50 உள்நோயாளிகளுக்கு சிகிச்சைசை அளிக்க வசதிகள் உள்ளன மற்றும் ஆயுர்வேர் த சிகிச்சைசை பெற விரும்பும் கோவிட் நோயாளிகளை தங்கள் மருத்துத் வமனைக்கு பரிந்துரைக்குமாறு மருத்துவமனை அதிகாரி கேட்டுக்கொள்கிறார்.
Comment