கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் உள்ள மக்களின் சனத்தொகை, மற்றும் நிலப்பரப்பு, வாழ்வாதார பிரச்சினைகள், இடர் கால நிலைமைகளை கையாளுதல் கிராமிய ரீதியான அபிவிருத்தி திட்டங்களின் போது ஏற்படக்கூடிய பாதிப்புகள், போன்ற பல்வேறு விடயங்களை கவனத்தில் கொண்டு கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிராம சேவையாளர் பிரிவுகளை அதிகரிக்க வேண்டுமென்று என்ற கோரிக்கையினை கிண்ணியா ஷூரா சபை முன்வைத்துள்ளது.
தற்பொழுது இந்தப் பிரதேச செயலகப் பிரிவில் 31 கிராம சேவையாளர் பிரிவுகள் அமைந்துள்ளன இதில் 17 பிரிவுகள் கிண்ணியா நகரசபை எல்லைக்குள்ளும் 14 கிராம சேவையாளர் பிரிவுகள் பிரதேச சபை எல்லைக்குள்ளும் அமைந்துள்ளன.
இந்த பிரிப்பான் அதே 32 வருடங்களுக்கு முன் செய்யப்பட்ட ஒரு பிரிப்பாகும். எனவே மக்களுடைய சனத்தொகை அதிகரிப்பு வாழ்வாதார பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்களையும் கவனத்திற் கொண்டு நிர்வாக ரீதியான இலகுவாக்குமைக்காக 60 கிராம சேவகர் பிரிவுகளா க அதிகரிக்க வேண்டும். என்ற கோரிக்கையினை கிண்ணியா சூரா சபை முன் வைத்துள்ளது.
Comment