எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு
பாராளுமன்ற கட்சித் தலைவர்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தின் ஊடாகத் தெரிவுசெய்யப்படவுள்ளார்.
பாராளுமன்ற கட்சித் தலைவர்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தின் ஊடாகத் தெரிவுசெய்யப்படவுள்ளார்.
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிலிருந்து வௌியேறியமை தொடர்பில் இலங்கை விமானப்படை அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.
ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் இரு மெய்ப்பாதுகாவலர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைதீவு நோக்கி பயணிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க விமானப்படை விமானமொன்று இன்று(13) அதிகாலை வழங்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் பூரண அங்கீகாரத்தின் கீழ் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு, சுங்க மற்றும் ஏனைய அனைத்து சட்டங்களுக்கு உட்பட்டு ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் இரு மெய்ப்பாதுகாவலர்களுடன் மாலைதீவிற்கு புறப்படுவதற்காக விமானமொன்று வழங்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியின் இந்த பயணத்திற்கு இந்தியாவினால் சலுகைகள் வழங்கப்படுவதாக வௌியான தகவல்களை நிராகரிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.
நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என குறித்த ட்விட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று(13) அதிகாலை மாலைதீவின் மாலே நகரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் படைகள் குவிப்பு; மேல் மாகாணத்தில் ஊரங்கு அமுல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று(13) அதிகாலை இலங்கையில் இருந்து மாலைதீவை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...
எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...
துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...
75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...
இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...