தலிபான்கள் காபூலுக்குள் நுழைவதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 70,000 க்கும் மேற்பட்ட மக்கள், வெளிநாட்டினர் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை காபூலில் இருந்து சுமார் 19,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இதேவேளை பல்கேரியா சுமார் 70 ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தஞ்சம் அளிக்கும் என்று அந்நாட்டின் தற்காலிக பிரதமர் ஸ்டீபன் யானேவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் முன்னர் காபூலில் உள்ள பல்கேரிய தூதரகத்தில் அல்லது ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கேரிய இராணுவப் பணிகளில் பணியாற்றியுள்ளனர் என்று அவர் கூறினார். வெளியேற்றும் நேரம் மற்றும் பாதை பற்றி அவர் விரிவாகக் கூறவில்லை.
(AJ)
Comment