கிண்ணியாவின் முதல் அரசியல் பிரமுகர் மர்ஹூம் எகுத்தார் ஹாஜியார் ஆவார். பெரியாற்றுமுனையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த மர்ஹூம்களான மாகாத் ஹாஜியார் - பாத்துமுத்து ஜொஹரா தம்பதிகளின் சிரே~;ட புதல்வராக 1901.01.01 ஆம் திகதி சீனக்குடா குவாட்டிக்குடாவில் இவர் பிறந்தார்.
இவரது காலத்தில் பாடசாலைகள் இல்லாததால் பாடசாலை சென்று இவரால் படிக்க முடியவில்லை. எனினும் ஜாஹுவப் பள்ளிவாயலில் இயங்கிய சஹ்தியா மத்ரசாவில் சேர்ந்து ஓதினார். அத்தோடு சுயமாக எழுதவூம்இ வாசிக்கவூம் கற்றுக் கொண்டார்.
தனது தந்தையின் வழியில் முத்துக் குளித்தல்இ யானை பிடித்தல்இ யானைத் தந்தம் விற்பனை செய்தல் போன்ற தொழில்களை இவர் செய்து வந்தார். இதனால் அக்காலத்தில் பெரும் நிலச் சுவாந்தராக இவர் திகழ்ந்தார். இவரது தொழில் துறைகளில் பலர் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருந்தனர்.
கம்பீரமான தோற்றம்இ கவர்ச்சியான குரல்இ எடுத்த வேலையை முடிக்கும் ஆற்றல்இ பொருளாதார பலம் என்பன இவரிடம் இருந்த மூலதனங்களாகும். இதனால் அப்போதைய அரசாங்க அதிபர் தோமஸ் கிரகம் விண்டல் (ஆங்கிலேயர்) அவர்களால் 1931ஆம் ஆண்டு தனது 30வது வயதில் கிண்ணியாவின் கிராமசபைத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். (அப்போது கிண்ணியா கிராம சபையாகவே இருந்தது)
இப்பொறுப்பு இவருக்கு விருப்பமில்லாத போதிலும் அரச அதிபரின் வற்புறுத்தலின் பேரில் இப்பொறுப்பை இவர் ஏற்றுக் கொண்டார். இந்தவகையில் கிண்ணியாவின் முதலாவது அரசியல் பிரமுகர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார். இதன் பின் நடைபெற்ற இரு தேர்தல்களில் “பச்சைப்பெட்டி”யில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார்.
(அக்காலத்தில் மக்கள் கல்வி அறிவூ குறைந்தவர்களாக இருந்த காரணத்தினால் வேட்பாளர்களுக்கு நிறப்பெட்டிகள் அறிமுகப் படுத்தப்பட்டன. வாக்காளர்கள் வாக்குச் சீட்டுக்களை தாம் விரும்பிய நிறப்பெட்டிகளில் போடும் ஏற்பாடு இருந்தது)
இந்தவகையில் 1947ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 17 வருடங்கள் கிண்ணியா கிராமசபைத் தலைவராக இவர் பணியாற்றியூள்ளார். அப்போதைய மனிங் அரசியல் யாப்பின் படி வசதி படைத்தோருக்கு வாக்குரிமை இருந்தது. இந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தில் வாக்குரிமை பெற்ற முதலாவது முஸ்லிம் நபர் என்ற பெருமையூம் இவருக்குண்டு.
இதனைவிட 1933ஆம் ஆண்டு அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சேர் டி.பீ. ஜெயதிலக்கவினால் உத்தியோகப் பற்றற்ற வரி அலுவலராக நியமிக்கப்பட்டார்.
கிண்ணியாவின் மத்தியதலமாக புகாரிச்சந்தியை உருவாக்கியவர் இவரேயாவார். நாற்சந்தியான இதன் ஒருபுறத்தில் மக்களின் தொழுகைக்காக தக்கியா உருவாக்கப்பட்டது. இதுவே புகாரிப் பள்ளிவாயலாகும்.. இதற்கான காணியை தனது சொந்தச் செலவில் பெற்றுக் கொடுத்தார். அடுத்த பக்கத்தில் பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுப்பதற்காக மர்ஹூம் ஹனிபா ஆலிமை (மர்ஹும் தமீம் ஆலிம்இ ஸக்கரியா ஆலிம் ஆகியோரின் வாப்பா) குடியமர்த்தினார்.
இன்னொரு பக்கத்தில் வெளியூ+ரில் இருந்து வருவோரின் வசதிக்காக தேனீர்க்கடை உருவாக்க காஞ்சனார் என்றழைக்கப்பட்ட மர்ஹூம் முகம்மது இப்றாஹீம் அவர்களைக் குடியமர்த்தினார். மற்றொரு பக்கத்தில் சிறார்களுக்கு “கத்னா” செய்வதற்காக மர்ஹூம் பிச்சைத் தம்பி ஒஸ்தாவைக் குடியமர்த்தினார்.
ஆரம்பகாலத்தில் கிராமசபைத் தலைவரின் சிபார்சுடனேயே விதானையார் நியமிக்கப்பட்டார். அந்தவகையில் மர்ஹூம்களான வாவூனாஇ முகம்மதுசுல்தான் (மர்ஹூம் முகம்மதுசரீபு ஹாஜியாரின் தந்தை) போன்றௌரை விதானையாராக இவர் சிபார்சு செய்தார்.
புகாரிச்சந்தியிலிருந்து நகரசபை வரையான பகுதி அக்காலத்தில் மையவாடியாக இருந்தது. இந்த மையவாடியை தற்போதைய இடத்திற்கு (கிண்ணியா மத்திய கல்லூரிக்கு முன்) மாற்றியவரும் இவரேயாவார். இதனைவிட ஆஸ்பத்திரியூம்இ பிரசவ விடுதியூம் தற்போதைய பெரியகிண்ணியா ஆண்கள் வித்தியாலயம் இயங்கும் இடத்தில் இவரால் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் தான் இப்பாடசாலை இன்றும் வாட்டுப் பள்ளி என்று அழைக்கப் படுகின்றது.
கிண்ணியா நகரசபைப் பகுதியில் அக்காலத்தில் கனிசமான தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கான சவச்சாலையை தோனாவில் உள்ள தனது சொந்தக் காணியில் (தற்போது மீனவர்களுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைந்துள்ள பகுதி) இவர் அமைத்துக் கொடுத்தார்.
இதனைவிட கிண்ணியாவின் பல்வேறு பகுதிகளிலும் நீ;ர் வழிந்தோடுவதற்கான கல்வட்டுக்கள் இவரால் நிர்மாணிக்கப்பட்டன. பொதுமலசலகூடங்களும் நிர்மாணிக்கப்பட்டன.
இவரது புதல்வர்களான மர்ஹூம் எம்.ஈ.எச். முகம்மதுஅலிஇ மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இவரது பேரர் இம்ரான் மஹ்ரூப் (மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூபின் மகன்) தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். மற்றொரு பேரன் முபாரக் அலி (மர்ஹூம் அலி எம். பியின் மகன்) நோர்வே நாட்டில் நகரசபை உறுப்பினராக இருந்துள்ளார். அந்தவகையில் அரசியல் வாரிசுகளை இவர் உருவாக்கிச் சென்றுள்ளமையூம் குறிப்பிடத்தக்கது.
இவர் 1963.03.03ஆம் திகதி காலமானார். இவரது ஜனாஸா பெரியாற்றுமுனை ஜாஹூவப் பள்ளிவாயலுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment