கிண்ணியாவின் முதல் ஆசிரியர் அமரர் த. காசிநாதர் அவர்களாவர். இவர் அமரர்களான தம்பர் - சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் 6வது புதல்வராக 1905.03.04 ஆம் திகதி சின்னக் கிண்ணியாவின் துறையடியை அண்டிய பகுதியில் பிறந்தார்.
மட்டக்களப்பு அரசடி வித்தியாலயாலயத்தில் கல்வி கற்ற இவர் 1930 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றார். அந்த வகையில் கிண்ணியாவின் முதலாவது ஆசிரியர் இவராவார். அளவெட்டிஇ நிலாவெளிஇ திருகோணமலைஇ கிண்ணியாஇ பள்ளிக்குடியிருப்புஇ ஆலையடிவேம்புஇ தம்பலகமம்இ குச்சவெளி போன்ற பிரதேசப் பாடசாலைகளில் இவர் ஆசிரியராக. மற்றும் அதிபராகப் பணியாற்றியூள்ளார்.
பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் பின்னர் அதிபராகப் பதவி உயர்வூ பெற்றார்.
1945 முதல் 1955 வரை 10 வருடங்கள் தற்போதைய கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி உள்ள இடத்தில் இயங்கிய பெரிய கிண்ணியா ஆண்கள் கலவன் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றினார்.
இவரது காலத்தில்தான் இப்பாடசாலை ஆண்கள் வித்தியாலயமாகவூம்இ பெண்கள் வித்தியாலயமாகவூம் பிரிக்கப்பட்டது. இரு பாடசாலைகளும் இதே காணியில் வேலியால் பிரிக்கப்பட்டு வெவ்வேறாக இயங்கின. பின்னர் ஆண்கள் வித்தியாலயம் தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
பாடசாலை பிரிக்கப்பட்ட பின் இவர் ஆண்கள் வித்தியாலய அதிபராகவூம்இ இவரது மனைவி செல்லப்பா இரட்ணபூபதி பெண்கள் வித்தியாலய அதிபராகவூம் கடமையாற்றினர். இவர்களது சேவைக்காலம் கிண்ணியாவின் கல்வி வரலாற்றில் பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது.
கிண்ணியாவில் கல்வி மட்டம் குறைந்திருந்த அக்காலத்தில் இவர் மிகவூம் அர்ப்பணிப்போடு சேவையாற்றினார். இங்குள்ள மாணவர்களுக்கு எப்படியாவது கல்வி கற்கும் ஆர்வத்தை தூண்டி கற்க வைக்க வேண்டும் என்பதில் மிகவூம் தியாகத்தோடு பணியாற்றினார். கற்க கூடிய வயதுள்ள மாணவர்கள் உள்ள வீடுகளுக்கு தேடிச் சென்று அவர்களை அழைத்து வந்து கற்பித்தார்.
வறுமை காரணமாக பலர் அக்காலத்தில் கல்வியை இடையில் கைவிட்டனர்.
இதனால் மிகவூம் மனமுடைந்த இவர் தனது சொந்தப் பணத்தில் உணவூ வழங்கி மாணவர்ளைக் கற்க வைத்தார். இவரது தோளில் எப்போதும் ஒரு பை இருக்கும். அதனுள் “வாட்டு ரொட்டிஇ ரஸ்க்” போன்ற உணவூப் பொருட்கள் இருக்கும். மாணவர் நிலையறிந்து அவற்றை அவர்களுக்கு அவர் கொடுப்பார்.
இதனால் வறுமை காரணமாக பாடசாலையைக் கைவிட்ட சில மாணவர்கள் மீண்டும் பாடசாலையில் இணைந்து கற்கத் தொடங்கினர்.
கிண்ணியாவின் ஆரம்பகால முஸ்லிம் ஆசிரியர்களான மர்ஹூம் ரீ.ஏ.எம்.இஸ்ஹாக்இ மர்ஹூம் எம்.ஐ.எம்.இப்ராஹீம் (காசீம்பாவா மாஸ்டர்)இ கவிஞர் மர்ஹூம் அண்ணல் (எம்.எஸ்.எம்.சாலிஹ்) உட்பட இன்னும் சிலர் இவரால் உருவாக்கப் பட்டவர்களேயாவர்.
அந்த வகையில் கிண்ணியாவின் கல்விக் கண்ணை திறந்து விட்ட பெருந்தகை இவர் என்று துணிந்து கூறலாம்.
கிண்ணியாவிலிருந்து புலமைப் பரிசில் பெற்று மேல் படிப்புக்காக வெளியூ+ர் செல்லும் மாணவர்களை இவர் தனது சொந்தச் செலவில் அப்பாடசாலைகளுக்கு அழைத்துச் சென்ற சம்பவங்கள் பல உள்ளன.
கிண்ணியா மக்களால் “முருகுப் பிள்ளை வாத்தியார்” என செல்லமாக அழைக்கப்பட்ட இவர் அக்கால மக்கள் அனைவரினதும் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.
இவரது சேவைக் காலத்திலிருந்தே கிண்ணியாவின் கல்வித் துறை மறுமலர்ச்சி பெற்றுள்ளதை கிண்ணியாவின் கல்வி வரலாற்றை ஆய்வூ செய்கின்றவர்களால் கண்டு கொள்ள முடியூம்.
தான் சேவையிலிருந்து ஓய்வூ பெற்றாலும் பல்வேறு சமூகப் பணிகளில் தொடர்ந்து இவர் ஈடுட்டுள்ளார். திருகோணமலை ஓய்வூ+தியம் பெறுவோர் சங்கத்தின் பொருளாளராக நீ;ண்ட காலம் இவர் பணியாற்றியூள்ளார்.
சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் கிண்ணியா ஊற்றடிப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவராகவூம்இ திருகோணமலை வீரகத்தி பிள்ளையார் ஆலயம் மற்றும் கோணேசர் கோயில் போன்றவற்றின் பரிபாலன சபை உறுப்பினராகவூம் பணியாற்றியூள்ளார்.
எனது தந்தையாரின் புத்தகக் கடைக்கு (றஹ்மத்துல்லாஹ் ஸ்டோர்ஸ்) முன்னால் இவரது உறவூக்காரரான செல்வராசா என்பவரின் வீடு இருந்தது. அங்கு அடிக்கடி வரும் இவர் எனது தந்தையாரை சந்திக்கவூம் வருவார். வரும் போது “ஹாஜியார் ஸலாம்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைவார். அப்போது சிறுவனாக இருந்த எனது மனக் கண்ணில் அவரது தோற்றம் இன்றும் நிழலாடுகின்றது.
அமரர் திருமதி கமலாதேவி (ஓய்வூபெற்ற ஆசிரியை –தம்பலகமம் பிரதேச செயலக அபிவிருத்தி இணைப்பாளர் மனோஜின் தாய்)இ சட்டத்தரணி சிவபாலன் ஆகிய இருவரும் இவரது பிள்ளைகளாவர்.
காசிநாதர் ஐயா கடந்த 1989 டிசம்பரில் இவ்வூலகை விட்டும் பிரிந்தார். இவர் மறைந்து பல வருடங்கள் சென்றாலும் கிண்ணியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனாலும் மறக்கப்பட முடியாத ஒருவராக இவர் இருக்கின்றார்.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment