இந்தியாவின் பிட்ஸ் எயார் தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவை நாளை (11) தொடக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிந்தியாவின் சென்னை, திருச்சி ஆகிய நகரங்களுக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
அதனைத் தொடர்ந்து வாராந்தம் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு விமான சேவைகள் நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஒருவழி விமான கட்டணம் இலங்கை நாணயத்தில் 7,900 ரூபா (இந்திய நாணயத்தில் 3,090 ஆகும்) என்று அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Comment