படகு சேவைக்கு அனுமதி வழங்கியது கிண்ணியா நகரசபை; பாராளுமன்றத்தில் அமைச்சர் ஜோன்ஸ்டன்
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு சேவையில் சிறுவர்களை அழைத்து செல்லும் வேளையில் உயிர் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தவில்லை, இது சட்டவிரோதமான செயற்பாடு மட்டுமல்ல நாட்டின் சட்டத்துக்கு அமைய இது கொலையே.
ஆகவே இந்த மரணங்களை நாம் கொலையாகவே கருதுகிறோம், இதனுடன் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்போம் என ஆளுந்தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார்.