Wednesday, 15, Oct, 6:59 AM

 

வை எல் எஸ் ஹமீட்
கடந்த தேர்தலில் தனித்துவக்கட்சிகளில் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளும் (தமது தலைவர்களை விடுத்து) அரசுடன்தான் இருக்கிறார்கள். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
முதலாவது வகை:
அவர்கள் அரசை ஆதரிப்பது சரியா? பிழையா? என்பது வேறுவிடயம். ஆனால் நேர்மையாக இதற்காகத்தான் நான் அரசை ஆதரிக்கிறேன்; என்று கூறிவிடுகிறார்கள். உதாரணமாக, எனக்கு ராஜாங்க அமைச்சுப்பதவி தருவதாக வாக்களித்திருக்கிறார்கள். அதனால் ஆதரவளிக்கிறேன். எனக்கூறுவது.
இவர்களை ஓரளவு ஜீரணிக்கலாம். ஏனெனில் இவர்கள் செய்வது சரியோ! பிழையோ! தமது உள்ளத்தில் இருப்பதை நேர்மையாக சொல்லிவிடுகிறார்கள்.
இவர்கள் நடிக்கவில்லை.
இரண்டாவது வகை:
அரசுடன் இருப்பது, ஆனாலும் அடுத்த தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக கட்சியில் இருப்பது போன்றும் காட்டிக்கொள்வது. சாதாரண பெரும்பான்மையினால் நிறைவேற்றக்கூடிய சட்டமூலங்கள், பிரேரணைகள் வரும்போது தலைவர் எதிர்த்து வாக்களித்தால் என்ன? நடுநிலை வகித்தால் என்ன, உள்ளகப் புரிந்துணர்வுடன் தாங்கள் வாக்களிப்பில் இருந்து தவிர்ந்துகொள்வது.
அதன்மூலம் தாங்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை; கட்சியுடனே இருக்கிறோம்; எனக்காட்டமுனைவது. ஆனாலும் தங்களது நிலைப்பாடுகளுக்கு தொலைக்காட்சிகளில்தோன்றி கண்மூடித்தனமான வாதங்களை முன்வைக்கின்ற, தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்துகின்ற முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.
அவர்களின் மனச்சாட்சிக்குத் தெரியும் தங்களது நிலைப்பாட்டை அறிவுபூர்வமாக நியாயப்படுத்தமுடியாதென்று.
சுருங்கக்கூறின் இவர்கள் நடிக்கிறார்கள். ஆனாலும் தங்களது நடிப்பிற்கு தங்கமுலாம்பூச எத்தனிப்பதில்லை. இவர்களையும் ஓரளவு ஜீரணிக்கலாம்.
மூன்றாவது வகை:
இவர்களும் அரசுடனேயே இருக்கிறார்கள். ஆனால், கட்சியுடனும் இருப்பதுபோல் காட்டிக்கொள்வது. அதாவது, இரண்டாவது வகையினர்போன்று நடிப்பது. ஆனால், அத்துடன் நின்றுவிடுவதில்லை. கிடைக்கின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலெல்லாம் தோன்றி தங்களது நடிப்பிற்கு தங்கமுலாம் பூசுவது. தங்களை உத்தமர்களாக காட்டமுனைவது.
தாங்கள் முன்வைக்கும் வாதங்களெல்லாம் முரண்பாடுகளின் சங்கமம் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. தீக்கோழியின் நிலை.
தனது தலைவரின் விடுதலைக்காகவே தாம் அரசுக்கு ஆதரவான நிலையில் இருப்பதாக கூறுவது. ஆனால் தனது தலைவர் பாராளுமன்றம் வந்து, தான் 100 நாட்களுக்குமேல் அநியாயமாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக முறையிடும்நிலை. அப்படியானால் இவர்கள் அரசு ஆதரவு நிலைப்பாடு இவர்கள் தலைவருக்கு கொண்டுவந்த நன்மையென்ன?
இவர்களின் தலைவரை நோக்கி ஆளும்கட்சி அமைச்சர் கூறுகிறார்; உங்களது தடுத்து வைப்பிற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை; என்று. அந்நேரம் தடுப்புக்காவல் உத்தரவை நீதித்துறையா வழங்கியது? நிறைவேற்றுத்துறையல்லவா?நிறைவேற்றுத்துறை என்பது அரசாங்கம் இல்லையா? என்றொரு கேள்வியை தமது தலைவருக்கு ஆதரவாக கேட்பதற்கு முடியவில்லை.
20 இல் இரட்டைப் பிரஜாஉரிமை சம்பந்தப்பட்ட சரத்து நீக்கத்திற்கு ஆதரவளிக்கும்போது சில இனவாத அரசியல் செய்பவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க இது அவசியம். அதனால்தான் வாக்களித்தோம்; என்பது. பின், அதே இனவாத அரசியல் செய்பவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால் அதே இனவாத அரசியல் செய்பவர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பது.
அவர்கள் அதற்கு நன்றிக்கடனாக இவர்களது தலைவரை இகழ்ந்து பேசுவதுடன், இவர்களை எங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க நாங்கள் கோரவில்லை; அவர்களாக வாக்களித்தார்கள்; என எள்ளிநகையாடுவது. இப்படி கேவலப்படுவதற்காகத்தான் இவர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பினார்களா? என்ற கேள்விகளுக்கு பதிலில்லை.
எத்தனை முரண்பாடுகள்.
தமது தலைவரை ஆளும் கட்சியும் இல்லாமல் எதிர்க்கட்சியும் இல்லாமல் தனி அணியாக இருந்து அரசியல்செய்ய தொலைக்காட்சிகளில் வந்து அழைப்பது. ( ஏன் தொலைக்காட்சிகளில் அழைப்பு விடுக்கவேண்டும்? நேரடியாக ஏன் முடியாது?- என்பது வேறுகேள்வி) அரசின் “நல்ல விடயங்களுக்கு” ஆதரவாகவும் பிழையான விடயங்களுக்கு எதிராகவும் வாக்களிப்போம்; என கோரிக்கை விடுப்பது. கோட்பாட்டு ரீதியாக அதில் தவறேதும் இல்லை. ஆனால், எந்த இனவாத அரசியல் செய்பவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக, எனக்கூறி 20 இன் பிரஜா உரிமை சரத்திற்கு ஆரவளிக்கப்பட்டதோ, அதே இனவாத அரசியல் செய்பவர்களுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்தது; எந்த வகையில் “நல்லவிடயம்” என்று கூறுவதில்லை.
அவ்வாறாயின் இவர்களின் அகராதியில் நல்ல விடயம் என்பது எது? சிலவேளை, தனது தலைவரை எதிர்க்கட்சியிலிருந்தும் பிரித்து நடுரோட்டில் விடும்நோக்கமோ தெரியாது.
தேர்தலில் முழுக்க, முழுக்க மொட்டை விமர்சித்து, உரிமைக்கோசம் எழுப்பி வாக்குகளைப்பெற்றுவிட்டு, தமது ஊர்மக்கள் ஊர்ப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காகத்தான் தம்மைப் பாராளுமன்றம் அனுப்பினார்கள்; என்பது. அவ்வாறு கூறும்போது எந்தவொரு ஊரும் தனித்து எந்தக்கட்சியிலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெறமுடியாது; என்ற யதார்த்தத்தை மறந்துவிடுவது.
மட்டுமல்ல, ஜனாதிபதித் தேர்தலை வென்ற மொட்டே பொதுத்தேர்தலையும்; வெல்லும் என்று தேர்தலின்போதே தெரியும். அப்படியிருந்தும் மொட்டை விமர்சித்ததேன்? அப்பொழுது இப்போது பேசும் மொட்டுக்கு ஆதரவாக பேசும் தத்துவங்களை ஏன் பேசவில்லை; என்ற கேள்விக்கும் பதிலில்லை.
அவ்வாறு ஆதரவளித்து இதுவரை சாதித்தது எதை?
ஜனாசா எரிப்பைத் தடுக்கமுடியவில்லை. ஜெனீவாவே தடுத்தது.
தனது தலைவரை 100 நாட்களாகியும் விடுதலை செய்யமுடியவில்லை.
இதுவரை சாதித்தது என்ன? சாதிக்கப்போவதென்ன?
சரி, இவை எல்லாவற்றையும் தாண்டி அரசுக்கு ஆதரவளிப்பவர்கள் ஆதரவளியுங்கள். ஆனால் நடிக்காதீர்கள். நடித்தாலும் அந்த நடிப்பிற்கு தங்கமுலாம் பூசாதீர்கள்.
பாரிற்கு (Bar) போய் வந்தால் நேர்மையாக பாரிற்கு போய் வருகிறேன்; என்று கூறுங்கள். முதலாவது வகைக்குள் வருவீர்கள். அல்லது மௌனமாகவாவது இருங்கள். இரண்டாவது வகைக்குள் வருவீர்கள்.
தயவுசெய்து பாரிற்குப் போய்வந்துவிட்டு, பள்ளிக்குப் போய் வந்ததாக கூறாதீர்கள். “மணம்” காட்டிக் கொடுத்துவிடும்

Comment


மேலும் செய்திகள்

  • சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    Super User 03 September 2023

    சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...

  • எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    Super User 03 September 2023

      எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...

  • ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    Super User 28 March 2023

    நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...

  • துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    Super User 08 February 2023

    துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...

  • வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    Super User 08 February 2023

    அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...

  • 75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    Super User 08 February 2023

    75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...

  • இலங்கையின் டொலர் கையிருப்பு  11.7% அதிகரிப்பு

    இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

    Super User 08 February 2023

    2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...

  • GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    Super User 08 February 2023

    இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...

  • துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    Super User 06 February 2023