நெருக்கடிக்கு தீர்வு எனும் கருப்பொருளில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த நிகாழ்வு கிண்ணியா நூலக கேட்போர்கூடத்தில் வியாழக்கிழமை 7.30 மணிக்கு நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான எம்.இ.எம்.ராபிக் ஆசிரியர் மற்றும் எ.எச்.எம். பஷீர் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரான அருண் ஹேமச்சந்திர தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சமூக நீதிக் கட்சியின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளருமான நஜா முகம்மத் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான லால்காந்த ஆகியோர் கலந்து கொண்டு சமகால நெருக்கடிக்கான தீர்வை முன்வைத்து உரையாற்றினர்.
அதேநேரம் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Comment