மீண்டுமொருமுறை...
விடை குழம்பும் கணிதச்சிக்கல்கள்.
நில்லாது சுழலும் வெள்ளைப் பம்பரம்
சொக்கலேற்றுக் குண்டுமுகத்தில்
சதா தேடல் கொண்டலையும்
தேனீக்களின் சோடிச் சிறகுகள்
சோர்வும் வாட்டமுமாய்
இன்று சோர்ந்து போனதுமேனோ ........!
முன்னோக்கி வா..
துல்லியம் பேசுகின்ற பேனாக்கள்
காகிதங்களில் கட்டுப்படக் கூடாது.
காட்சி கோணல்கள்
வலுவிழந்து வயோதிபம்
தட்டுகின்ற பழுத்த இலைகள்
கீழே சிதறி சருகாகின்றன.
கோடைமழை
இன்பத்தின்
நிலையென நீடித்துப்போனது
நேற்றைய மழையின் வரவு
கோடை கக்கிய வெப்பத்தின் எரிச்சலில்
இறுக்கமும் புழுக்கமுமாய் மாறியிருந்தது என் வீடு
அநேக நேரம் விடாப்பிடியான தாகத்துடன்
இருப்பிடத்தை கிழித்தெறிந்து வெளியேறியது
அடைவிட்ட கோழிகளும்
அண்டவந்த சிறுபூச்சிகளும்