Thursday, 30, Nov, 11:20 PM

 

வலுவிழந்து வயோதிபம்
தட்டுகின்ற பழுத்த இலைகள்
கீழே சிதறி சருகாகின்றன.

இந்த கொளுத்தும் கோடையும்
நீரைக் கொப்பளிக்கும்
மேகக் கூட்டங்களும்
வானிலை அறிக்கையையும்
காலநிலை மாற்றத்தையும்
தலைப்புச் செய்திகளாய் சொல்லி
மார்பிலடித்துக் கொண்டு
கதறியழுகின்றன.

சுழன்று சரிகின்ற விதியின்
விஞ்ஞாபனத்தில் கற்றுத் தேற
காட்சிக் கோணங்கள்
எத்தனையிருந்தாலும்
யாரும் சிதறுகின்ற இலைகளையும்
விழுந்து தவிக்கின்ற விதைகளைப்
பற்றியும் எவ்வித
கவலையும் கொள்வதில்லை.

விழுந்த விதைகள்
வெயிலில் சிக்கித் தவித்தாலும்
மழை நீர் வெள்ளத்தில் அவை
மண்ணை துளைத்து முளை விட்டு
உயிர்ப்போடு நிமிர்ந்து எழும்.

-நஸார் இஜாஸ் -

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners