
கிண்ணியாவின் முதல் முஸ்லிம் தாதி (பெண்) உத்தியோகத்தர் எம்.என்.றினோஸா பேகம் அவர்களாவர். இவர் எம்.எம்.நிஸார் - எம்.ஏ.சரிபா உம்மா தம்பதிகளின் புதல்வியாக 1981.05.07 இல் சின்னக் கிண்ணியாவில் பிறந்தார்.
தனது ஆரம்பக்கல்வியை அல் அக்ஸா கல்லூரியில் கற்ற இவர் இடைநிலைக்கல்வியை கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும், உயர்கல்வியை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலும் கற்றார்.
2002 இல் மட்டக்களப்பு தாதியர் கல்லூரியில் இணைந்த இவர் 2006 இல் தாதியாக நியமணம் பெற்றார். இந்தவகையில் கிண்ணியாவின் முதல் தாதி (பெண்) என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
கல்முனை அஸ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலை, மூதூர் தள வைத்தியசாலை ஆகியவற்றிலும் பணிபுரிந்த இவர் தற்போது கிண்ணியா தளவைத்தியசாலையில் பணிபுரிந்து வருகின்றார்.
கிண்ணியா கோட்டக் கல்வி அதிகாரி மர்ஹூம் கே.எம்.வஸீர் அவர்களின் முன்னெடுப்புக்களால் நீண்ட இடைவெளிக்குப் பின் 1991 இல் தான் கிண்ணியாவில் 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்தனர். இவ்வாறு சித்தியடைந்த சொற்ப மாணவர்களுள் இவரும் ஒருவர்.
றஊபு றக்கீப் இவரது வாழ்க்கைத் துணைவர். றொமா முஹஜா, விஸ்மா முஹ்ஜா, நுமா மஹியத் ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
இன்னும் நீண்டகாலம் பணிசெய்யக் கூடிய வாய்ப்பு இவருக்கிருக்கின்றது. இவரது பணி சிறக்க வாழ்த்துவோம்.
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment